India vs UAE Asia Cup 2025: இந்தியா – யுஏஇ இடையிலான கிரிக்கெட் போர்.. எப்போது, எங்கே, எப்படி போட்டியை காண்பது?

IND vs UAE Live Streaming: 2025 ஆசிய கோப்பை செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியை 2025 செப்டம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக விளையாடுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, SonyLiv மற்றும் Sony Sports சேனல்களில் நேரலையில் காணலாம்.

India vs UAE Asia Cup 2025: இந்தியா - யுஏஇ இடையிலான கிரிக்கெட் போர்.. எப்போது, எங்கே, எப்படி போட்டியை காண்பது?

இந்தியா - யுஏஇ

Published: 

10 Sep 2025 08:32 AM

 IST

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) நேற்று அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடக்க போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. அதேநேரத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு எதிராக விளையாடுவதன் மூலம் தங்கள் முதல் போட்டியில் களமிறங்குகிறது. சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி 9வது முறையாக ஆசிய கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதுவரை இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது, மேலும் ஆசிய கோப்பை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகவும் உள்ளது. இந்தநிலையில், இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டி விவரங்களை தெரிந்து கொள்வோம்.

இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான போட்டி எப்போது தொடங்குகிறது..?

இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரவு போட்டிகள் வழக்கமாக மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் கடுமையான வெப்பத்தையும், கிரிக்கெட் வீரர்களின் சோர்வையும் கருத்தில் கொண்டு, போட்டி அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் . டாஸ் அரை மணி நேரம் முன்னதாக, அதாவது இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.

ALSO READ: ஆசிய கோப்பை இன்று முதல் தொடக்கம்.. A முதல் Z வரை அனைத்து விவரங்களும் இங்கே!

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தியா vs UAE அணிகளுக்கு இடையிலான 2025 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியை ரசிகர்கள் Sony Liv ஆப் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம். அதேநேரத்தில், இந்த போட்டி பல்வேறு சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தொலைக்காட்சியில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்திய போட்டிகளின் அட்டவணை:

2025 செப்டம்பர் 10 – இந்தியா vs யுஏஇ – துபாய் – இரவு 8 மணி
2025 செப்டம்பர் 14 – இந்தியா vs பாகிஸ்தான் – துபாய் – இரவு 8 மணி
2025 செப்டம்பர் 19- இந்தியா vs ஓமன்- அபுதாபி – இரவு 8 மணி
2025 செப்டம்பர் 28 – இறுதிப் போட்டி – துபாய் – இரவு 8 மணி

இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பின்வருமாறு:

இந்தியா:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜாஸ்ப் சக்ரவர்த்தி, ஜாஸ்ப் சக்ரவர்த்தி.

ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

ALSO READ: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா..? செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:

முஹம்மது வாசிம் (கேப்டன்), அலிஷான் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஆசிப் கான், துருவ் பராஷர், எதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கௌஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபாரூக், முகமது ஜவதுல்லா, முகமது ஜவதுல்லா கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.

Related Stories
Suryakumar Yadav: இந்தியாவிற்கு எதிரான காரியத்தை செய்தாரா சூர்யகுமார் யாதவ்..? கொந்தளித்த ரசிகர்கள்..!
IND vs UAE Dubai Weather: இந்திய அணியின் போட்டிக்கு தடை போடுமா மழை…? துபாயில் வியர்க்க வைக்குமா வெயில்? வானிலை நிலவரம்!
India vs UAE Asia Cup 2025: UAEக்கு எதிராக முதல் போட்டி! இந்திய பிளேயிங் லெவனில் சாம்சனுக்கு இடமா? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Suryakumar Yadav: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா..? செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!
Hardik Pandya Viral Watch: வைரலான ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச் இவ்வளவு விலையா? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Asia Cup 2025: ஆசியக் கோப்பை தொடக்கப் போட்டி! ஆப்கானிஸ்தான் – ஹாங்காங் மோதல்.. கடந்தகால சந்திப்புகள் எப்படி?