IND vs BAN: ஆசியக் கோப்பை.. சூப்பர் 4ல் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா!
Asia Cup 2025 Super 4: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா இந்த தொடரில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது, வங்கதேசம் 3ல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி வலுவாக உள்ளது என்றாலும், வங்கதேசத்தின் அதிர்ச்சியளிக்கும் பங்களிப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியக்கோப்பை
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றில் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரானது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றை எட்டியது. தொடர்ந்து தற்போது சூப்பர் 4 ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
இந்தியா vs வங்கதேசம் அணிகள்
இப்படியான நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதியான இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும். ஆசிய கோப்பை தொடரை பொறுத்தவரை இந்தியா ஏ பிரிவிலும், வங்கதேசம் பி பிரிவிலும் இடம் பெற்றிருந்தது.
இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக உள்ளது. அதேசமயம் வங்கதேசம் அணி 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இதையும் படிங்க: ஆசியக் கோப்பைக்காக மாஸ் லுக்.. புது ஹேர் ஸ்டைலில் உலா வரும் ஹர்திக் பாண்ட்யா!
மேலும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக திகழ்கிறது. ஒருவரை மட்டுமே நம்பியில்லாமல் அணியில் அனைத்து வீரர்களும் தங்கள் திறமைகளை கிடைக்கும் கேப்பில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆசிய கோப்பையை நிச்சயம் இந்திய அணி கைப்பற்றும் என பலரும் கணித்துள்ளனர்.
இந்தியாவும் வங்கதேசம் அணிகள் இதுவரைஒ 17 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. வங்கதேசத்தின் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. எனினும் ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இப்போட்டி எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணி தேர்வு குறித்து கருத்து.. வெளிநாட்டு வீரர்களை சாடிய கவாஸ்கர்!
இரு அணிகள் உத்தேச விவரம்
இந்தியாவை பொறுத்தவரை அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அணியில் சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி, மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் விளையாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.