IND vs PAK Live Streaming: சூப்பர் 4ல் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. போட்டியை எங்கு, எப்போது காணலாம்..?

Asia cup 2025 India vs Pakistan Live Streaming: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சூப்பர் ஃபோர் போட்டியில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. குரூப் கட்டத்தைப் போலவே, இந்த சூப்பர் ஃபோர் போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். டாஸ் அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் .

IND vs PAK Live Streaming: சூப்பர் 4ல் மோதும் இந்தியா - பாகிஸ்தான்.. போட்டியை எங்கு, எப்போது காணலாம்..?

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

21 Sep 2025 07:00 AM

 IST

2025 ஆசிய கோப்பையில் (Asia Cup 2025) இந்தியா-பாகிஸ்தான் (India – Pakistan) இடையேயான சூப்பர் 4 சுற்று போட்டி இன்று அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, குரூப் ஸ்டேஜ் கட்டத்தில், இந்திய அணி (Indian Cricket Team) பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தார். அதே நேரத்தில் அபிஷேக் சர்மாவும் வெறும் 13 பந்துகளில் 31 ரன்கள் குவித்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். இப்போது, ​​அனைவரின் பார்வையும் இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டியில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கு பார்ப்பது என்பதை தெரிந்து கொள்ளவும்.

இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்-4 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே காணலாம்..?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி 2025 செப்டம்பர் 21ம் தேதியான இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும். நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை சோனி ஸ்போர்ட்ஸ் 1, சோனி ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் 4 ஆகியவற்றில் காணலாம். அதேநேரத்தில், ரசிகர்கள் சோனி லிவ் ஆப் மற்றும் சோனி வலைத்தளத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

ALSO READ: மீண்டும் மீண்டுமா..? செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த பாகிஸ்தான்.. அதிருப்தியில் ஐசிசி!

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் 11 முறை இந்திய அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் 6 முறை வென்றுள்ளது. அதேநேரத்தில்,  மூன்று போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிந்துள்ளன. இதற்கிடையில், இந்தியாவும் பாகிஸ்தானும் டி20 சர்வதேச போட்டிகளில் 14 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 11 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் இந்தியாவை 3 முறை தோற்கடித்துள்ளது.

இந்தியாவின் சூப்பர் 4 அட்டவணை

இந்திய அணியின் முதல் சூப்பர் ஃபோர் போட்டி 2025 செப்டம்பர் 21ம் தேதியான இன்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும். இதனை தொடர்ந்து, இந்திய அணி 2025 செப்டம்பர் 24ம் தேதி வங்கதேசத்தையும், 2025 செப்டம்பர் 26ம் தேதி இலங்கையையும் எதிர்கொள்கிறார்கள். 2025 ஆசியக் போட்டியின் இறுதிப் போட்டி 2025 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும்.

ALSO READ: 50 பந்துகளில் அதிவேக சதம்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மாஸ் காட்டிய ஸ்மிருதி மந்தனா!

இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா , வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்

பாகிஸ்தானின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:

சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், சல்மான் அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் முகீம், அப்ரார் அகமது