Arshdeep Singh: களத்தில் மிட்செல் மேல் பாய்ந்த பந்து.. அசால்ட் செய்த அர்ஷ்தீப்.. அபராதம் விதித்த ஐசிசி!

ICC fine Arshdeep Singh: நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் பேட்டிங் செய்தபோது, இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். அப்போது. அர்ஷ்தீப் சிங் பந்தை அடிக்க முயற்சித்து, டேரில் மிட்செல் க்ரீஸூக்கு வெளியே நின்றார். கைக்கு வந்த பந்தை அர்ஷ்தீப் சிங் கோபமாக ஸ்டம்பிற்கு எறிவதற்கு பதிலாக மிட்செல் மேல் எறிந்தார்.

Arshdeep Singh: களத்தில் மிட்செல் மேல் பாய்ந்த பந்து.. அசால்ட் செய்த அர்ஷ்தீப்.. அபராதம் விதித்த ஐசிசி!

அர்ஷ்தீப் சிங்

Published: 

10 Mar 2026 18:38 PM

 IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதாவது 2026 மார்ச் 10ம் தேதி அபராதம் விதித்துள்ளது. கடந்த 2026 மார்ச் 6ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப்போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்கும் மிட்செலும் மோதிக்கொண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக ஐசிசி (ICC) நடத்தை விதிகளின் லெவல் 1 மீறலுக்காக அர்ஷ்தீப் சிங் தண்டிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சச்சினிடம் 25 நிமிடங்கள் போனில் பேசிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பியது குறித்து விளக்கம்!

என்ன நடந்தது..?


நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் பேட்டிங் செய்தபோது, இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். அப்போது. அர்ஷ்தீப் சிங் பந்தை அடிக்க முயற்சித்து, டேரில் மிட்செல் க்ரீஸூக்கு வெளியே நின்றார். கைக்கு வந்த பந்தை அர்ஷ்தீப் சிங் கோபமாக ஸ்டம்பிற்கு எறிவதற்கு பதிலாக மிட்செல் மேல் எறிந்தார். அப்போது நியூசிலாந்து பேட்ஸ்மென் தனது கோபத்தை வெளிப்படுத்து, அர்ஷ்தீப் சிங் குறித்து நடுவரிடம் புகார் அளித்தார். அந்த நேரத்தில், அர்ஷ்தீப் சிங் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்றாலும், போட்டிக்கு பிறகு தனது மன்னிப்பை மிட்செல்லிடம் கூறினார். இருப்பினும், இது ஐசிசி விதிகளின்படி குற்றம் என்பதால் அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம் விதித்தது ஐசிசி.

போட்டி கட்டணத்தில் 15% அபராதம்:


சர்வதேச போட்டியின்போது முறையற்ற அல்லது ஆபத்தான முறையில் பந்து அல்லது கிரிக்கெட் உபகரணங்களை ஒரு வீரரை நோக்கி எறிவது தொடர்பான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.9 ஐ மீறியதற்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்தது. அபராதத்துடன் கூடுதலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் பெறப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் இதுபோன்ற முதல் மீறல் இதுவாகும்.

ALSO READ: டி20 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணிக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ..

நிலை 1 மீறல்களுக்கு ஒரு வீரருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அல்லது போட்டி கட்டணத்தில் குறிப்பிட்ட அளவிலான அபராதம் விதிக்கப்படும். அதேநேரத்தில் ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுள்ள புள்ளிகளை குவித்தால், இந்த புள்ளிகள் இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டு ஒன்று அல்லது 2 போட்டியில் தடை விதிக்கப்படலாம்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..