TVK Vijay – CSK: தவெக ’விசில் போடு’ மந்திரம்.. விஜயின் தேர்தல் வெற்றி.. தோனியும் சிஎஸ்கேவும் ஒரு காரணமா..?
Chennai Super Kings: கடந்த 2010ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலும் ரசிகர்களை கவருவதற்காக ‘விசில் போடு’ என்ற வாசகத்தை பயன்படுத்த தொடங்கியது. அன்று தொட்டு இன்று முதல் சிஎஸ்கேவின் தாரக மந்திரமாக இருக்கும் நிலையில், கடந்த 2025ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் விசில் போடு என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

எம்.எஸ்.தோனி - தவெக தலைவர் விஜய்
கடந்த 2026 மே 4ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான (2026 Assembly Elections Tamil Nadu) வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பலரும் எதிர்பார்த்த அல்லது எதிர்பார்க்காதது போலவும் நடிகரும், தவெக தலைவர் விஜயின் (TVK Vijay) தமிழக வெற்றிக்கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் இரு முன்னணி கட்சிகளான திமுக, அதிமுகவை ஓரங்கட்டியது. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இன்னும் 10க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவுகளை பெறுவது முக்கியம். அதற்கான ஆலோசனைகளையும் தவெக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தவெகவின் வெற்றிக்கு, எம்.எஸ்.தோனியும் (MS Dhoni) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் காரணம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் என்ன தொடர்பு என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ALSO READ: விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்?.. கடும் நிபந்தனையுடன் அதிரடி முடிவு..
சிஎஸ்கேவின் விளம்பர தூதர்:
Vijay Thalapathy was not wrong when he said this:
“Even in cricket, the one who whistles is Tamil Nadu—CSK! Even in the upcoming election, the one who is going to blow the whistle is our TVK!”🔥 pic.twitter.com/rKM49Lp6xA
— Abhishek Kumar (@Abhishek060722) May 4, 2026
கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக அப்போதைய நடிகரும், இப்போதைய தவெக தலைவருமான விஜய் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஒரு சில போட்டிகளுக்கு விஜய் நேரில் சென்று உற்சாகப்படுத்தினார். அந்த நேரத்தில், விஜய் தனது மகன் ஜேசன் விஜயுடன் விசில் ஊதிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமின்றி, எம்.எஸ்.தோனியுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கிறது.
’விசில் போடு’ மந்திரம்:
கடந்த 2010ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலும் ரசிகர்களை கவருவதற்காக ‘விசில் போடு’ என்ற வாசகத்தை பயன்படுத்த தொடங்கியது. அன்று தொட்டு இன்று முதல் சிஎஸ்கேவின் தாரக மந்திரமாக இருக்கும் நிலையில், கடந்த 2025ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் விசில் போடு என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தவெகவின் சின்னமாகவே விசில் கிடைத்தது. தொடர்ந்து, ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே களமிறங்கும்போதெல்லாம் ஸ்டேடியத்திற்குள் மட்டும் ஒலித்த விசில், விஜய் வெளியே வரும் நேரமெல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஒலித்தது.
ALSO READ: தொடர்ந்து முன்னேறும் சிஎஸ்கே.. புள்ளி பட்டியலில் என்ன நிலைமை?
தல – தளபதி காம்போ:
பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை ’தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, இந்த பட்டம் முற்றிலும் எம்.எஸ்.தோனி பக்கம் வந்தது. ஒரு பக்கம் தோனியை தல என்றும், மறுபக்கம் விஜயை தளபதி என்றும் அழைக்க தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விஜயும், எம்.எஸ்.தோனியும் சந்தித்துகொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்படியே, கோட் படத்தில் எம்.எஸ்.தோனி சிக்ஸருடன் கிளைமேக்ஸ் காட்சிகள் என்று அதிகளவில் விஜய்க்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ந்து, சிஎஸ்கே போட்டியின்போது ஸ்டேடியத்திற்குள் சிஎஸ்கே ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காண்பித்ததையும் காண முடிந்தது. இதுவும், தவெக தமிழ்நாட்டில் பெரும் கட்சியாக உருவெடுக்க உதவியதாக கூறப்படுகிறது.