PAK vs AFG: இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ரத்து செய்ய திட்டம்!

Afghanistan Cricket Board: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு தொடர் வருகின்ற 2025 நவம்பர் 17 முதல் 29 வரை பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே, ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது.

PAK vs AFG: இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ரத்து செய்ய திட்டம்!

சல்மான் அலி - ரஷீத் கான்

Published: 

18 Oct 2025 11:05 AM

 IST

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (Pakistan vs Afganistan) இடையேயான எல்லையில் நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டையும் பாதிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) முடிவு செய்துள்ளது. முன்னதாக, இந்த முத்தரப்பு தொடரானது வருகின்ற 2025 நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்தில், ஆப்கானிஸ்தான் அர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளது உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: டெஸ்ட்-ம் டி20யும் சேர்ந்த கலவை.. கிரிக்கெட்டில் வருகிறது புது வடிவம்.. ஆர்வத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

முத்தரப்பு தொடர் எப்போது..?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு தொடர் வருகின்ற 2025 நவம்பர் 17 முதல் 29 வரை பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்தது, இதில், 3 அணிகளும் மோத இருந்த. அதிலும் குறிப்பாக, வருகின்ற 2025 நவம்பர் 17ம் தேதி தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளவிருந்தன. அதைத் தொடர்ந்து. இந்த இரு அணிகளும் வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி 2வது போட்டியிலும் மோத இருந்தன. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளையாட மறுப்பதால் முத்தரப்பு தொடர் இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு தொடராக மாற வாய்ப்புள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் உறவு பாதிக்கப்படுமா..?


ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. முன்னதாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி இருதரப்புத் தொடர் 2012-13 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது நடைபெற்றது, அதே நேரத்தில் இந்திய அணி கடைசியாக 2005-06 இல் பாகிஸ்தானுக்குச் சென்றது. இப்போது, ​​ஆப்கானிஸ்தானின் பெயர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ALSO READ: பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்படுமா..?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்த விஷயத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இருப்பினும், தொடருக்கு மாற்றாக ஒரு அவசர கூட்டத்தை வாரியம் கூட்டக்கூடும். தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால், ஒளிபரப்பு உரிமைகள், டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் உட்பட PCB கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இழப்பை சந்திக்க நேரிடும்.