India A vs Pakistan A: இந்திய ஏ அணிக்கு எதிராக சம்பவம்.. பாகிஸ்தான் ஏ அணி கலக்கல் வெற்றி!
Asia Cup Rising Stars: கத்தாரில் நடைபெற்ற இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான நட்சத்திர தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தான் ஏ அணி
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் 2025 இன் (Rising Stars Asia Cup 2025) குரூப் போட்டியில் இந்தியா ஏ அணி பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை கொடுத்தது. கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்ற போட்டியில், மஸ் சதக்கத்தின் அட்டகாசமான ஆல்ரவுண்ட் செயல்திறனால் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை (Indian A team) தோற்கடித்தது. ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் 2025 போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். அதே நேரத்தில் இந்திய அணி இந்த போட்டியில் முதல் தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே. மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ஜோபிக்கவில்லை.
ALSO READ: சிஎஸ்கே அணி யாரை தக்க வைத்தது..? மற்ற அணிகளின் நிலவரம் என்ன..? முழு பட்டியல் இதோ!
போட்டியில் நடந்தது என்ன..?
India A will aim to bounce back in their last group stage match.
Scorecard ▶️ https://t.co/5Wk1PzTdTp#RisingStarsAsiaCup pic.twitter.com/JnVWxzG5vV
— BCCI (@BCCI) November 16, 2025
கத்தாரில் நடைபெற்ற இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான நட்சத்திர தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முந்தைய போட்டியில் தனது அபார சதத்திற்குப் பிறகு, வைபவ் சூர்யவன்ஷி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 45 ரன்கள் எடுத்தார்.
வைபவ் நமன் தீருடன் இணைந்து 49 ரன்கள் எடுத்து அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டனர்.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹித் அஜீஸ்:
இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி தனது விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு, இந்திய ஏ அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த மூன்று விக்கெட்டுகள் வெறும் 13 ரன்களுக்குள் விழுந்தன. தொடர்ந்து, இந்திய அணி 19 ஓவர்களில் வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹித் அஜீஸ் 4 விக்கெட்டுகளையும், மாஸ் சதக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ALSO READ: ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள்.. காத்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள்.. A-to-Z விவரங்கள் இதோ!
பந்துவீச்சுக்குப் பிறகு, மஸ் சதகத் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு, பாகிஸ்தானுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். பாகிஸ்தான் ஷாஹீனின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறிய பங்களிப்புகளை மட்டுமே கொடுத்தனர். வெறும் 31 பந்துகளில் அரைசதம் அடித்த சதகத், இறுதி வரை நிலைத்து நின்று 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் ஏ அணியை வெறும் 13.2 ஓவர்களில் வெற்றிபெற உதவி செய்தார். இதன் மூலம், பாகிஸ்தான் ஏ அணி பிளேஆஃப்களை அடைந்தது.
இந்தியா ஏ அணியின் அடுத்த போட்டி வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி ஓமனுக்கு எதிராக விளையாடவுள்ளது.