Abhishek Sharma Fastest Fifty: நியூசிலாந்திற்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம்.. அசத்திய அபிஷேக் சர்மா..!

IND vs NZ 3rd T20: அபிஷேக் சர்மா 14 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இது மூன்றாவது வேகமான அரைசதமாகும். நமீபியாவின் ஜான் ஃபிளிங்க் 13 பந்துகளில் தனது வேகமான டி20 அரைசதத்தை எட்டியுள்ளார்.

Abhishek Sharma Fastest Fifty: நியூசிலாந்திற்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம்.. அசத்திய அபிஷேக் சர்மா..!

அபிஷேக் சர்மா

Updated On: 

25 Jan 2026 22:16 PM

 IST

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் (Ind vs Nz 3rd T20), நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 14 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், இந்தியாவுக்காக (Indian Cricket team) வேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். தனது இன்னிங்ஸில் ளை அடித்தார். இந்தியாவுக்காக வேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் மற்றும் உலகின் 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!

இந்தியாவுக்கான இரண்டாவது வேகமான அரைசதம்:


சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த சாதனையை யுவராஜ் சிங் வைத்திருக்கிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் அதிவேக அரைசதம் அடித்த உலக சாதனையாக இது இன்னும் உள்ளது.

  • 12 பந்துகள் – யுவராஜ் சிங்
  • 14 பந்துகள் – அபிஷேக் சர்மா
  • 16 பந்துகள் – ஹர்திக் பாண்ட்யா

ALSO READ: இது நடந்தால் உலகக் கோப்பையில் இருந்து விலகுவோம்.. மொஹ்சின் நக்வி அதிர்ச்சி தகவல்!

உலகின் மூன்றாவது வேகமான அரைசதம்


அபிஷேக் சர்மா 14 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இது மூன்றாவது வேகமான அரைசதமாகும். நமீபியாவின் ஜான் ஃபிளிங்க் 13 பந்துகளில் தனது வேகமான டி20 அரைசதத்தை எட்டியுள்ளார். அபிஷேக் சர்மா இப்போது 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் அடித்த நியூசிலாந்தின் கொலின் முன்ரோவை சமன் செய்துள்ளார்.

  1. 12 பந்துகள் – யுவராஜ் சிங்
  2. 13 பந்துகள் – ஜான் ஃப்ரைலிங்க்
  3. 14 பந்துகள் – கொலின் முன்ரோ
  4. 14 பந்துகள் – அபிஷேக் சர்மா
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?