Asia Cup Centuries: ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் இதுவரை 2 சதங்கள்.. பட்டியலில் டாப் இந்திய வீரர் இடம்!
Asia Cup History: 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சதம் அடித்த இரண்டு முக்கிய வீரர்களைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது. பாபர் ஹயாத் 2016 ஆசியக் கோப்பையில் ஹாங்காங்கிற்காகவும், விராட் கோலி 2022 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காகவும் சதம் அடித்தனர்.

விராட் கோலி - பாபர் ஹயாத்
2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டியானது டி20 வடிவத்தில் நடைபெறுகிறது . ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த முறை 8 அணிகள் போட்டிகளில் பங்கேற்கும் நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் 4 என 2 குழுக்களாக வைக்கப்பட்டுள்ளன. 2026 டி20 உலகக் கோப்பையை (T20 World Cup 2026) கருத்தி கொண்டு, இந்த முறை ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் விளையாடப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆசிய கோப்பையின் டி20 வடிவத்தில் சதம் அடித்த 2 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம். அதில், ஒரு முக்கிய வீரர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ALSO READ: ஆசியக் கோப்பையில் எந்த அணி எப்போது யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை விவரம் இதோ!
2025 ஆசிய கோப்பையில் சதம் அடித்த 2 பேட்ஸ்மேன்கள்:
In last Asia cup in T20 format, Kohli scored his 71st century after 1021 days. The day when every viratian cried with a smile. 💙🥹
The day when cricket peaked, life peaked, Kohli peaked 🥶
The best Asia cup for me!!!! 💗💯 pic.twitter.com/IIWlz3PBkh
— RAJ…!!! 18 (@_Raj___18) August 26, 2025
2025 ஆசியக் கோப்பை முதன்முதலில் டி20 வடிவத்தில் 2016ம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில், ஆசியக் கோப்பை வரலாற்றில் ஹாங்காங் பேட்ஸ்மேன் பாபர் ஹயாத் முதல் சதத்தை அடித்தார். ஓமனுக்கு எதிராக அற்புதமாக பேட்டிங் செய்து பாபர் ஹயாத் 122 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு, இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலியும் கடந்த 2022ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் சதம் அடித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 122 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் முதல் மற்றும் ஒரே சதமாகும். இப்போது விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும், பாபர் ஹயாத் மீண்டும் ஹாங்காங்கிற்காக விளையாட இருக்கிறார்.
இந்தியாவின் முதல் போட்டி எப்போது யாருடன்..?
2025ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியை வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் முதல் போட்டி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நடைபெறுகிறது. ஆசியக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார்.
ALSO READ: கவாஸ்கர் முதல் ரோஹித் வரை.. ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய வீரர்கள் பட்டியல்..!
கடந்த 2023ம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், மீண்டும் ஒருமுறை பட்டத்தை வெல்லும் நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.