India – Pakistan: இது அரசின் முடிவு! இந்தியா – பாகிஸ்தான் போட்டி சர்ச்சை.. சுனில் கவாஸ்கர் பளீச் பதில்!
2025 Asia Cup: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து பேசியுள்ளார். 2025 செப்டம்பர் 14ம் தேதியான நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எதிர்பார்த்துள்ளது.

சுனில் கவாஸ்கர்
இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி அதாவது நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் சிலர் இந்திய அணிக்கு (Indian Cricket Team) எதிரான பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து பேசியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் பேச்சு:
“He has bowled the odd over as well” – Sunil Gavaskar predicts India’s star performer ahead of Asia Cup 2025 match against Pakistan https://t.co/yTCfievu5o pic.twitter.com/PHSUwlAvx0
— Sportskeeda (@Sportskeeda) September 13, 2025
இந்தியா டுடேவுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சுனில் கவாஸ்கர், “பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்கள் உத்தரவுகளை பின்பற்றுகிறார்கள். அரசியல் ரீதியாக முக்கியமான அனைத்து முடிவுகளும் பிசிசிஐ மற்றும் இந்திய அரசு போன்ற உயர் அதிகாரிகளால் கையாளப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை இந்திய அரசாங்கம்தான் முடிவை எடுக்கிறது. அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், வீரர்களும் பிசிசிஐயும் பின்பற்ற வேண்டும். அதுதான் நடந்துள்ளது. நாம் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல, இறுதியின் இது அரசாங்கத்தின் முடிவு. அதுதான் ஆசியக் கோப்பையில் நடக்கிறது.” என்று தெரிவித்தார்.
ALSO READ: துபாய்க்கு வராத பிசிசிஐ அதிகாரிகள்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பா?
ரசிகர்கள் எதிர்ப்பு:
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #BoycottIndvsPak போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகி வருகின்றன. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் போட்டியை தவிர்க்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், இரு அணிகளுக்கு இடையிலான டிக்கெட் விற்பனை மெதுவாகவே உள்ளது. டிக்கெட்கள் விற்பனை தொடங்கி 10 நாட்களுக்கு மேலாகியும் ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட பாதி விற்கப்படாமலே உள்ளது.
2025 செப்டம்பர் 14ம் தேதியான நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எதிர்பார்த்திருந்தது . இருப்பினும், ரசிகர்கள் போட்டியில் அதிக ஆர்வம் காட்டவில்லை . போட்டிக்கான டிக்கெட்டுகளில் பாதி கூட இன்னும் விற்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.