IndvsSA : மாஸ் காட்டிய கோலி, குல்தீப்… தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

Virat Kohli : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷத் ரானாவின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

IndvsSA : மாஸ் காட்டிய கோலி, குல்தீப்... தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

Updated On: 

30 Nov 2025 23:01 PM

 IST

தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa) எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. ராஞ்ச்சியில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலியின் (Virat Kohli) அபாரமான 52வது சதமும், குல்தீப் யாதவின் கலக்கலான ஸ்பின்னும், ஹர்ஷித் ராணாவின் தாக்குதலும் இணைந்து இந்தியாவுக்கு 17 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றியை வழங்கின. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடைந்துள்ள இந்த வெற்றி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா படைத்த உலக சாதனை

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதன் பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி –  ரோகித் சர்மா ஜோடி அதிரடியாக அடி தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். அதிரடியாக ஆடிய ரோகித் மேலும் ஓர் உலக சாதனையை படைத்தார். இந்தப் போட்டியில் தனது 352 சிக்சரை அடித்த அவர், உலக அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.  இந்த நிலையில் 51 பந்துகளில் 57 ரன்கள் குவித்த அவர் மார்கோ ஜேன்சன் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க : 17 ஆண்டுகள்.. தொடரும் கிரிக்கெட்.. புது சாதனை படைக்கும் விராட் கோலி – ரோஹித் சர்மா!

சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி

மற்றொரு பக்கம் விராட் கோலி தனது அதிரடியை குறைக்கவில்லை. அதிரடியாக ஆடிய அவர் தனது 52 வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார்.  120 பந்துகளை எதிர்கொண்ட அவர், 11 பவுண்டரிகள் 7 சிக்சர் என அவர் 135 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் எடுக்க காரணமாக அமைந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் கே.எல்.ராகுலும், ஜடேஜாவும் அதிரடி காட்ட இந்திய அணி 349 ரன்கள் என்ற வலுவான இலக்கை பதிவு செய்தது.

இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, ஆரம்பத்திலேயே 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழுந்து தடுமாறியது. ஆனால் அந்த அணியின் மேத்யூ பிரிட்ஸ்கே 72 ரன்கள், மார்கோ ஜேன்சன் 70, கோர்பின் போஷ் 60 என அந்த அணியின் நடுப்பகுதி வீரர்கள் வலுவான ரன்களை அடிக்க அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இதையும் படிக்க : IND vs SA Series: முதல் போட்டியிலேயே வரலாறு படைக்கும் ரோஹித்-கோலி ஜோடி.. எப்படி தெரியுமா?

இருப்பினும் இந்திய பந்து வீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அதிரடியாக ஆடி தென்னாப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து குல்தீப் 4, ஹர்ஷித் ராணா 3 என அந்த அணி வீரர்கள் நல்ல அதிரடி காட்டினர். இருப்பினும் ஆட்டம் கடைசி வரை பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில் இந்திய அணி 17 ரன்களில் திரில் வெற்றி பெற்றது.

Related Stories
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?
India vs Pakistan: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!
T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..