உங்கள் வீட்டில் அருகம்புல் செடியை இப்படி நட்டு வைத்தால்.. செல்வம் வந்து சேரும்!
Vastu Tips: ஆன்மீக பலன்களுக்கு அருகம்புல் செடியை வீட்டின் பூஜை அறை அருகில் வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். குறிப்பாக வீட்டில் தினசரி தீபம் ஏற்றும் பகுதி அல்லது பிரார்த்தனை செய்யும் இடம் அருகில் அருகம்புல் செடியை வைத்தால், அந்த இடத்தின் நேர்மறை அதிர்வுகள் அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.

அருகம்புல் செடி
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி, வீட்டின் உள்ளே வைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டின் ஆற்றலுக்கும், சூழலுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் என வாஸ்து குறிப்புகள் (Vastu)கூறுகின்றன. எப்படி வீட்டில் ஒவ்வொரு பொருட்களும் சரியான திசையில் இருக்க வேண்டும் என கூறப்படுகிறதோ, அதேபோல வீட்டில் வைத்திருக்கும் செடிகளுக்கும் குறிப்பிட்ட திசை வழிகாட்டுதல்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுவது அருகம்புல் ஆகும். அருகம்புல், விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாக கருதப்படுவதால், இதை வீட்டில் நட்டு வளர்ப்பது மிகுந்த கவனமாக, செய்யும் செயல் என நம்பப்படுகிறது.
அவ்வாறு, வாஸ்து சாஸ்திரத்தின் படி, அருகம்புல் செடி வீட்டின் கிழக்கு திசையில் அல்லது வட திசையில் வைக்கப்பட வேண்டும். இத்திசைகளில் அருகம் புல்லினை வைத்தால் வீட்டின் பொருளாதார நிலை வலுப்பெற்று நல்வாழ்வு, செழிப்பு தொடர்ந்து கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க : உங்கள் காரில் விநாயகர் சிலை வைத்துள்ளீர்களா?.. அப்போ கண்டிப்பா இதை செய்யுங்கள்!!
அருகம்புல் ஏன் முக்கியம்?
அருகம்புல் பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கும், அதற்கேற்ப வீட்டில் சந்தோஷமும் முன்னேற்றமும் அதிகரிக்கும் என பழமொழி சொல்கிறது. அதனால் அருகம் புல்லினை சரியாக நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். செடி உலர்வது நல்லதல்ல எனக் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரம் படி, அருகம்புல் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, அமைதி, ஒற்றுமை மற்றும் வளம் நிறைந்த சூழலை உருவாக்குகிறது.
வாஸ்து படி அருகம்புல்லை வைக்க சிறந்த திசைகள்:
செல்வ வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அருகம்புல்லினை வடகிழக்கு (ஈசானியம்) திசையில் வைக்கவும். ஆன்மீக பலன்களுக்கு அருகம் புல்லை வீட்டின் பூஜை அறை அருகில் வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்க, அருகம்புல்லை தென்கிழக்கு திசையில் வைப்பது பயனுள்ளதாகும். விவாதங்களும் மோதல்களும் குறைய, அருகம்புல்லினை தென்மேற்கு திசையில் வைக்கலாம்.
மாணவர்களின் கவனம் மற்றும் ஒருமைப்பாடு மேம்பட படிக்கும் மேசையில் ஒரு சிறிய அருகம்புல்லினை வைப்பதன் மூலம் கல்வியில் கவனம் கிடைப்பதோடு, கல்வி முன்னேற்றத்தையும் அதிகரிக்கிறது. மேலும், அருகம்புல் வீட்டில் வைத்திருப்பது ஆன்மீகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், சுற்றுப்புறத்திற்கும் நல்ல மாற்றத்தைத் தரும் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: குழந்தைகளை பெயர் சுருக்கி கூப்பிடுவதா நல்லதா? நியூமராலஜி சொல்வது இதுதான்!
வளர்ச்சியை தரும் அருகம்புல் செடி:
குறிப்பாக வீட்டில் தினசரி தீபம் ஏற்றும் பகுதி அல்லது பிரார்த்தனை செய்யும் இடம் அருகில் அருகம்புல்லினை வைத்தால், அந்த இடத்தின் நேர்மறை அதிர்வுகள் அதிகரித்து மன அமைதி கிடைக்கும். மேலும் அருகம்புல் மிக விரைவாக வளரக்கூடியது என்பதால், இது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தொடர்ந்து இதனை நன்றாக பராமரித்து, பழைய உலர்ந்த பகுதிகளை அகற்றிக் கொண்டே சென்றால், வீட்டின் ஆற்றல் எப்போதும் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என வாஸ்து நம்பிக்கையில் கூறப்படுகிறது.