‘வியாழக்கிழமை’ இன்று தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள்!
Guru bagavan: வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாளான இன்று அவரை வேண்டினால், ஞானம் பெற்று வாழ்வு முன்னேற்ற பாதையை நோக்கி நகரும் என்பது நம்பிக்கை. அதோடு, ஞானத்தை அள்ளி வழங்கும் சாய்பாபா, ஸ்ரீராகாவேந்திரா போன்ற மகான்களை வழங்கவும் வியாழன் ஏற்ற நாளாகும்.

குருபகவான்
வாரத்தின் ஏழு நாட்களும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவது இந்து வழிபாட்டு முறையின் சிறப்பு அம்சமாகும். மக்கள் தங்களுடைய வாழ்வினை செழிமையாக்க அவசியமான உடல் நலன், செல்வம், வேலைவாய்ப்பு, ஞானம் போன்றவைக்காக குறிப்பிட்ட நாளில் விரதம் இருந்து வேண்டுவர். குறிப்பாக வெள்ளி, சனி நாட்களில் அதிகமானோர் விரதம் இருப்பதை பார்த்திருப்போம். அதேபோல், வியாழக்கிழமையான இன்றும் பலர் விரதம் இருப்பர் இந்நாள் குரு பகவனுக்கு உரிய நாளாகும். ஞானத்தை வழங்கும் கடவுள் ஆவார். இவரை வேண்டுவதால், படிப்பு, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும் என நம்பப்படுகிறது.
தேவர்கள் மத்தியில் அதிபதியாக விளங்கக் கூடியவர் குருபகவான். வியாழன் என்பது குருபகவானைத்தான் குறிக்கிறது. குரு பிரகஸ்பதியே, நவக்கிரகங்களில் குருபகவானகக் காட்சியளிக்கிறார். இன்று அவரை வேண்டினால், ஞானம் பெற்று வாழ்வு முன்னேற்ற பாதையை நோக்கி நகரும் என்பது உண்மை.
Also read: அதிர்ஷ்டம் தரும் சந்திரன் – குரு இணைவு.. 6 ராசிக்கு ராஜயோகம்!
வளர்பிறையில் வரக்கூடிய வியாழனில் தொடங்கி, 16 வியாழன் தொடர்ந்து விரதம் இருந்து பிரம்ம முகூர்த்ததில் விளக்கு ஏற்றி குருபகவானின் காயத்ரி மந்திரங்கள் செல்லி பிராத்திக்க வேண்டும். இனிப்பு பண்டங்கள் படைக்கவேண்டும். பின், சிவபெருமான் கோவிலில் நவக்கிரகத்தோடு இருக்கும் குருபகவானுக்கு கொண்டைகடலை மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
ஆரோக்கியத்தில் குறைபாடு, ஆன்மீகத்தில் நாட்டமின்மை, ஏதோ ஒரு காரணத்தால் அவப்பெயர் மற்றும் பொருளாதார சரிவு போன்றவற்றை சரிசெய்ய தொடர்ந்து 16 வியாழன் வழிபாடு செய்து வந்தால், குறைபாடுகள் அகன்று நல்லதொரு வாழ்வு தொடங்கும்.
ஞானத்தை அள்ளி வழங்கும் சாய்பாபா, ஸ்ரீராகாவேந்திரா போன்ற மகான்களை வழங்கவும் வியாழன் ஏற்ற நாளாகும். மேலும், வியாழன் தோறும் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்து வந்தால் செல்வம் குவியும்.
வியாழன் அன்று செய்யக் கூடாதவை:
பழைய பேப்பர் சேர்ந்து விட்டால், அதை வியாழனற்று எடைக்கு போடக் கூடாது. அதோடு பழைய நோட்டு புத்தகங்களை கழிப்பதால், ஞானத்திற்குரிய நாளில் அதை செய்யக்கூடாது.
படிப்பு, வேலை, ஞானம் போன்றவற்றை குருபகவானிடம் கேட்டு கோவிலுக்கு செல்வதால், அந்நாள் முழுவதும் அசைவத்தை தவிர்ப்பது கட்டாயம்.
ஒட்டடை படிந்திருந்தால் அதை வியாழக்கிழமை செய்யாதீர்கள் மற்றொரு நாள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
Also Read : கஜகேசரி யோகம்.. ராஜயோகம் தேடி வரும் 6 ராசிகள்
வியாழன் அன்று செய்யக்கூடியவை:
குழந்தைகளுக்கு பள்ளிகூட கட்டணம் செலுத்துவை வியாழனன்று செய்தால், குரு தட்சணக்கு சமமாகி விடும் இதனால், குரு பகவானின் அருள் கிடைக்கும்.
கோவிலில் அன்னதானம் கொடுப்பதற்கு முடிவு செய்தால் அதை வியாழக்கிழமைகளில் செய்யலாம்.