பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி.. இந்த கோயில் தெரியுமா?

திருநெல்வேலியில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில், நரசிம்ம அவதாரத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி நாம் காணலாம். எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரமாக உள்ள நரசிம்மரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி.. இந்த கோயில் தெரியுமா?

லட்சுமி நரசிம்ம பெருமாள்

Updated On: 

01 May 2025 12:18 PM

பொதுவாக இந்து மதத்தைப் பொறுத்தவரை கடவுள்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு அவதாரம் எடுத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படியாக விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரமாக உள்ளது தான் நரசிம்மர் அவதாரமாகும். இந்த அவதாரத்தில் சிங்கத்தின் தலையும், மனித உடலும் இணைந்த தோற்றத்தில் அவர் காட்சிக் கொடுக்கிறார். இரணியன் என்ற அரக்கனை வதம் செய்த அவர் எடுத்த அவதாரம் இது என சொல்லப்பட்டுள்ளது. வைணவ மதத்தைப் பொறுத்தவரை நரசிம்ம அவதாரம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அப்படியான நரசிம்மருக்கு அனைத்து ஊர்களில் பல்வேறு பெயர்களில் கோயில்கள் உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி (Tirunelveli) டவுணில் அமைந்திருக்கும் லட்சுமி நரசிங்கப்பெருமாள் (Lakshmi Narasimha Perumal) கோயில் பற்றி நாம் காணலாம்.

இந்த கோயில் திருநெல்வேலி டவுன் மேல அது வீதியில் லாலா சித்திர முக்கு என்ற பகுதிக்கு மேல் பக்கமாக அமைந்துள்ளது. காலை 8 மணி முதல் 10:30 மணி வரையும் மாலையில் 5:30 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த கோயில் திறந்திருக்கும். இந்த நரசிங்கபெருமாள் கோயில் ஆனது 1300 ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது.

நரசிம்மரின் அளவற்ற சக்தி

எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலானது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உருவாவதற்கு முன்னரே இந்த கோயிலின் நரசிம்ம பெருமாள் திருமேனி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நரசிங்க பெருமாளின் சன்னதியும் நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரே மட்டத்தில் இருந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களுக்கும் சுரங்கப்பாதை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்து விட்ட நரசிங்க பெருமாள் கோயில் வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் கோன் என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.  அப்போது அளவற்ற சக்தியை நரசிம்மர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கோயில் சிறப்புகள்

இரணியன் என்ற அசுரன் நாட்டு மக்கள் தன்னை வணங்கு வேண்டும் என உத்தரவிட்டான். ஆனால் அவனது மகன் பிரகலாதன் பெருமாளின் பக்தராக திகழ்ந்தார். தந்தை மீது மரியாதை கொண்டு இருந்தாலும் அவரை கடவுளாக ஏற்க பிரகலாதன் மறுத்தான். தன்னுடைய பிள்ளை என்றும் பாராமல் பல வகையிலும் பிரகலாதனை இரணியன் கொடுமைப்படுத்தினான். அவனைக் காப்பாற்ற வலிமை மிக்க இரணியனை திருமால் அளிக்க எண்ணினார். ஆனால் தனக்கு மனிதர்கள், மிருகம் மற்றும் பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தை இரணியன் பெற்றிருந்தான்.

இதன் காரணமாக சிங்கமுகமும் மனித உடலும் கொண்ட வித்தியாசமான தோற்றத்தில் பெருமாள் அவதரித்தார். பெருமாள் நரசிம்ம அவதாரத்தில் இரணியனை அழித்த நிலையில் அவரது உக்கிரத்தை தணிக்க லட்சுமி பூமிக்கு வந்து பகவானின் மடியில் வாழ்ந்தால் இதனால் இந்த கோயிலில் நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.

பல்வேறு கோயில்களிலும் பெருமாள் தாயாரை இடது கையால் அரவணைத்தபடி இருக்கும் சிலையை பார்த்திருக்கலாம். பெருமாளின் இடது மொழியில் அமர்ந்த மகாலட்சுமி அவரின் தோளில் கைப்பற்றபடி இருப்பதை காண முடியும். லட்சுமியின் கையில் தாமரை மலர் இருக்கும் நிலையில் அவளின் பார்வை பெருமாளை நோக்கி இருப்பதை காணலாம்.

இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும் லட்சுமிக்கும் பக்தர்கள் அரிசி தேங்காய் மற்றும் நல்லெண்ணெய் எடுத்து செய்கின்றனர். அரிசியை ஒரு தட்டில் பரப்பி தேங்காயை உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுகிறார்கள். இதன் மூலம் செவ்வாய் தோஷம் மற்றும் அதனால் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி புரட்டாசி சனிக்கிழமை நரசிம்மர் ஜெயந்தி உள்ளிட்டவை மிக விமரிசியாக கொண்டாடப்படும்.