Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சித்ரா பௌர்ணமி விழா.. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!

சித்திரை பௌர்ணமியன்று கொண்டாடப்படும் சித்திரகுப்த ஜெயந்தியின் சிறப்புகள், காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி நாம் காணலாம். சவுதாஸ் மன்னனின் கதை மூலம் சித்திரகுப்தரின் அருளின் பெருமையையும் இதில் சொல்லப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி விழா.. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!
சித்திரகுப்தன் கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 May 2025 14:01 PM

இந்து மதத்தை பொறுத்தவரை பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு சிறப்பு நாளாக ஒவ்வொரு மாதங்களில் கொண்டாடப்படுகிறது. அது வளர்பிறையாக இருந்தாலும் சரி, தேய்பிறையாக இருந்தாலும் சரி விசேஷ நாளாகவே பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் சித்திரை மாதத்தில் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி என்பது மிகவும் விசேஷமானது. இந்த நாளில் தான் எமதர்மராஜாவின் எமலோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் பிறந்தநாள் ஆக கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் சித்திரகுப்தருக்கென காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே கோயில் அமைந்துள்ளது. அதன் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த கோயில் ஆனது தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் தான் இந்த கோயில் ஆனது அமைந்துள்ளது.

கோயில் உருவான வரலாறு

பொதுவாக சித்திரகுப்தன் சிவன் பார்வதி அருளால் இந்திரன் இந்திராணிக்கு குழந்தை இல்லா கவலை நீங்க தெய்வ பசுவான காமதேனு மூலம் அவதரித்தவர் என சொல்லப்படுகிறது. அதே சமயம் எமலோகத்தில் நிலவிய நிர்வாக சீர்கேட்டை சரி செய்வதற்காக பிரம்மன் தனது மனதில் ரகசியமாக ஒரு உருவத்தை உண்டாக்கி 11 ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கி தவம் இருந்தார். அதன் முடிவில் தோன்றியவர் தான் சித்ரகுப்தன் என சொல்லப்படுகிறார். சித்திரகுப்தனின் சந்ததியினர் கருநீகர் என அழைக்கப்படுகின்றனர். பிரம்மாவின் ஆணைப்படி காளி தேவியை வணங்கி சித்திரகுப்தர் என் எழுத்து ஆகிய இரண்டிலும் புலமைப் பெற்றவராக திகழ்ந்தார். தொடர்ந்து உஜ்ஜயினி சென்று மகாகாலேஸ்வரரின் அருளை பெற்று கணக்கு வழக்குகளை பதியும் திறமையை கற்றார். பின்னர் ஐப்பசி மாதம் துவிதியை நாளில் எமதர்மராஜாவின் கணக்கராக பதவி ஏற்றதாக புராணங்கள் சொல்கிறது.

கோயிலின் சிறப்புகள்

முன்னொரு காலத்தில் சவுதாஸ் என்ற மன்னன் சௌராஷ்டிரம் எனப்படும் மாகாணத்தை ஆண்டு வந்தான். அசுரர்களை விட மிகவும் கொடியவனாக திகழ்ந்த அவன் மக்களை துன்புறுத்தி வந்தான். தன்னுடைய உத்தரவு இல்லாமல் நாட்டில் எந்த செயலும் நடக்கக்கூடாது என தெரிவித்து இருந்தான். ஒரு நாள் தான் காட்டில் வேட்டையாட சென்ற போது உடன் வந்தவர்களை விட்டு வழி தவறி வெகு தூரம் சென்று விட்டான். வெளியில் செல்ல வழி தேடிய நிலையில் அவனது காதில் யாரோ சித்திரகுப்த காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் சத்தம் கேட்டது. வந்த திசையில் சென்று பார்த்தபோது அங்கு தேவர்களும் முனிவர்களும் வேள்வி செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சவுதாஸ் எப்படி என் அனுமதியில்லாமல் வேல்வி செய்யலாம் எனக் கூறி நிறுத்தாவிட்டால் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினான்.

ஆனால் துறவிகள் அவனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. வேள்வி நடத்தும் முதியவரை சவுதாஸ் கொல்ல முயல ஒரு சிறுவன் இடைமறித்து நீ யார் என கேட்டான். அதற்கு நான் ராஜாதிராஜன் என சவுதாஸ் கூற இந்த உலகில் சித்திரகுப்தர் ஒருவர் தான் ராஜாதிராஜர் என அச்சிறுவன் பதில் அளித்தான். மேலும் நாங்கள் எங்கள் குலதெய்வமாகிய சித்திரகுப்தனுக்கு பூஜை செய்கிறோம். நீங்களும் கலந்துகொண்டு புண்ணியம் பெறலாம் எனக் கூற செய்த பாவங்களுக்கு பரிகாரமாக மனம் வருந்தி வேள்வியில் சவுதாஸ் கலந்து கொண்டான்.

பின்னர் சவுதாஸ் மறைந்த போது எமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான் அங்கு அவனது கர்ம வினைகளை சித்திரகுப்தர் எமதர்மராஜாவிடம் படித்துக் காட்டினார். நியாயமாக பார்த்தால் நரகத்தில்தான் இவன் இருக்க வேண்டும். ஆனால் பின்னாளில் மனம் திறந்து நம் இருவரையும் முறையாக பூஜை செய்து வந்துள்ளான். அதனால் இவனுக்கு சொர்க்கத்தை பலனை அளிக்க அனுமதி அளிக்கலாம் என சித்திரகுப்தன் கூற எமன் எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதித்தார் என சாஸ்திரங்கள் சொல்கிறது.

கிடைக்கும் பலன்கள்

இந்த சித்திரகுப்த பூஜையை நான் முறையாக செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது எண்ணமாக உள்ளது மேலும் கேது பகவானின் அதிதேவதை யான சித்திரகுப்தர் வணங்குவதால் கேதுவினால் துன்பம் இருக்காது. மேலும் வளமான வாழ்வு மோட்சம் ஞானம் செல்வ வளம் ஆகியவை அனைத்தும் கிடைக்க மறக்காமல் சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறத. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் சித்ரகுப்தற்கு ஜெயந்தி விழா விமரிசையாக இந்த கோயிலில் கொண்டாடப்படுகிறது மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் சித்ரகுப்தற்கு அபிஷேகம் செய்து புது ஆடை சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இணையத்தில் பதிவிடப்படும் கருத்துகள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எக்காரணம் கொண்டும் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.1.12 லட்சம் வரை!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.1.12 லட்சம் வரை!...
எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்!
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்!...
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?...
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி...
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்..
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.....
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை...
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா..
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா.....
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்...
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்......
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...