தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மரணம் – அரசியல் தலைவர்கள் இரங்கல்
Beela Venkatesan : தமிழ்நாடு எரிசத்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.கடந்த 2 மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் காலமானார். மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது. தமிழ்நாடு எரிசத்தி துறை செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 24 , 2025 அன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 56. அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தமிழ் நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீலா வெங்கடேசனின் பின்னணி
பீலா ராஜேஷ் கடந்த 1969 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்தார். அவரது தாய் ராணி வெங்கடேசன் தமிழ்நாடு காங்கிரஸின் முக்கிய பொறுப்பு வகித்தார். மேலும் அவரது தந்தை எல்.என்.வெங்கடேசன் ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கணவர் ராஜேஷ் தாஸும் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!
பீலா ராஜேஷ் கடந்த 1997 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். பின்னர் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக அரசில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
கொரோனா காலக்கட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
தமிழ் நாடு அரசின் சுகாதார செயலாளராக கடந்த பிப்ரவரி 17, 2019 அன்று பதவியேற்ற பீலா வெங்கடேசன் மருத்துவ மேலாண்மை தகவல் தொழில்நுட்பம் என்ற அமைப்பை தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகள் தொடர்பான தரவுகள் மற்றும் மருத்துவ விவரங்களை சேமித்து வைப்பதற்கும் உதவியது. இது மருத்துவர்கள் தொடர்ந்து நோயாளிகளின் உடல் நலனை கண்காணிக்க உதவியது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு டெங்கு நோய் தொற்று குறைப்பு நடவடிக்கையிலும் முக்கிய பங்காற்றினார். மேலும் கொரோனா காலகட்டத்தில் வருகிற ஜூன் 12, 2020 அன்று வரை அவர் சுகாதார செயலாளராக பணியாற்றும் வரை தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
இதையும் படிக்க : அக்டோபர் 14ல் கூடும் தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இது போக பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநலிங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக திறம்பட பணியாற்றினார். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் பீலா வெங்கடேசன் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது பணி மக்களால் என்றும் நினைவு கூறப்படும்.