Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அதிமுக ஆட்சி அமைந்தவுடன்   நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கம்  - எடப்பாடி பழனிசாமி உறுதி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உறுதி

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Sep 2025 20:43 PM IST

Edappadi Palaniswamy In Nilgiri : 2026ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீலகிரியில் உள்ள இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் குன்னூரில் மருத்துவமனை கட்டித் தரப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி, செப்டம்பர் 24 :  நீலகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புரை மேற்கொண்டார். குன்னூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது அவர் முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதன்படி, “2026ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீலகிரியில் உள்ள இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் குன்னூரில் மருத்துவமனை கட்டித் தரப்படும். தமிழக கேரளா எல்லை பகுதியில் வசிக்கும் ஈழவா தீயா சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அரசின் ஓபிசி பட்டியல் இணைப்பு குறித்து அதிமுக ஆட்சி அமைந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Published on: Sep 24, 2025 08:43 PM