பெளர்ணமி கிரிவலம்…திருவண்ணாமலைக்கு போறீங்களா…சிறப்பு ரயில் அறிவிப்பு!

Pournami Girivalam Special Train: பெளர்ணமியையொட்டி, விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவில்லாத 8 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன. ரயில் புறப்படும் நேரம், தேதி, நின்று செல்லும் ரயில் நிலையங்கள் குறித்து பார்க்கலாம்.

பெளர்ணமி கிரிவலம்...திருவண்ணாமலைக்கு போறீங்களா...சிறப்பு ரயில் அறிவிப்பு!

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

Published: 

29 Jan 2026 07:08 AM

 IST

திருவண்ணாமலை உண்ணாமலை அம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாதம் தோறும் பௌர்ணமி நாளன்று கிரிவலம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருவார்கள். அவர்கள், சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பௌர்ணமி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பார்கள். அதன்படி, தை மாதத்துக்கான பௌர்ணமி நிகழ்வு வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அந்த நாளில் உகந்த நேரத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, பல்வேறு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு

அதன்படி, இந்த விழாவில் பங்கேற்கும் பொது மக்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இந்த கிரிவலத்தில் பங்கேற்கும் பொது மக்களுக்கு விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு

இந்த ரயிலானது, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி (வண்டி எண்: 06130) காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 11:45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். இதே போல, மறு மார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06129) மதியம் 2:15 மணிக்கு விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்து சேரும். முன்பதிவு இல்லாத இந்த சிறப்பு ரயிலில் 8 பொதுப் பெட்டிகள் இருக்கும்.

சிறப்பு ரயில் நின்று செல்லும் நிலையங்கள்

இந்த சிறப்பு ரயிலானது வெங்கடேஷ்புரம், மாம்பலப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி பயனடையுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி பூஜைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, தற்போது விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இயக்கம் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும்.

மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பொது மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ஏற்பாடு…நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?