11:11, 2:22, 3:33 போன்ற எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? அதற்கு காரணம் தெரியுமா?
11:11, 2:22: நமது மூளை இயற்கையாகவே ஒரே மாதிரி வரும் வடிவங்களையோ, எண்களையோ விரைவாக கவனிக்கிறது. எனவே, இந்த எண்களை பார்த்தால் அது சிறப்பு என்று தோன்றும். அதோடு, உங்கள் மூளை எதை முக்கியம் என்று நினைக்கிறதோ, அதையே மீண்டும் மீண்டும் உங்களுக்கு காட்டும்.
ஒரு நாளில் பல முறை 11:11, 2:22, 3:33 போன்ற எண்கள் கண்களில் பட்டதுண்டா? மொபைல் நேரம் 11:11-ஆக இருந்ததோ, உங்களுக்கு கிடைத்த தொகை ₹555-ஆக இருந்ததோ, அல்லது நீங்கள் பயணிக்கிற கேப் எண் 222-ல் முடிவடைந்ததா? இவை எல்லாம் சாதாரண ஜோதிடங்கள் மட்டுமல்ல என்று பலர் நம்புகின்றனர். இவ்வாறு மீண்டும் மீண்டும் தோன்றும் எண்குறிகள் தேவதை எண்கள் எனப்படுகின்றன. இவை நம்மை பிரபஞ்சம் மெதுவாக வழிநடத்தும் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன. ஜோதிட நிபுணர்கள் கூறுவதற்கேற்ப, ஒவ்வொரு எண் தொடர்களும் தனித்தனி அதிர்வுத்திறனைக் கொண்டுள்ளன. அண்மையில் வைரலாகும் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், இந்த தேவதை எண்களின் அர்த்தமும், அவற்றைக் காணும் போது செய்ய வேண்டிய ஆன்மீக செயல்களும் விளக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!
11:11
இந்த எண் உங்கள் வாழ்க்கையில் புதிய ஆரம்பங்கள் நெருங்கி வருவதை உணர்த்தும் ஒரு பிரபஞ்ச அறிவிப்பு. இந்த எண்ணைக் காணும்போது கண்களை மூடி “ஓம்” என்பதை 11 முறை பிராத்தனை செய்யலாம்.
2:22 அல்லது 2222
இந்த எண் மனத்தில் சுமையாக இருந்து வந்த உணர்ச்சிக் கட்டுகளைக் குறைத்து, மனநிலையை ஒளிமயமாக்குவதை குறிக்கிறது. இதைக் கண்ட உடன் கண்களை மூடி “ஓம் நம சிவாய” என 22 முறை சொல்லலாம்.
333
இந்த தொடர் செழிப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் அடையாளம். மகாலட்சுமியின் அருள் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைச் சுட்டிக்காட்டும். கண்களை மூடி “ஶ்ரீம்” என்ற மந்திரத்தை 33 முறை ஜபிக்கவும்.
444
இது ஒரு வலுவான பாதுகாப்பு எண். உங்கள் வாழ்க்கையில் உள்ள தீய பார்வை, எதிர்மறை ஆற்றல், அல்லது உங்களை தடுக்கக்கூடிய நிழல் சக்திகள் நீங்கும் என குறிக்கிறது. இந்த எண்ணைக் கண்டால், நீங்கள் விட விரும்பும் நான்கு விஷயங்களை மனதில் நினைத்து, அவற்றை மனக்கண்களில் ‘கிராஸ்’ அடித்து நீக்கப்படுவதை கற்பனை செய்யுங்கள்.
555
இந்த எண் திடீர் மாற்றங்கள், வேகமான வளர்ச்சி மற்றும் எதிர்பாராத முன்னேற்றத்தை அறிவிக்கும் ஒன்று. உடனடியாக கண்களை மூடி காயத்ரி மந்திரத்தை 5 முறை சொல்லவும்.
இதையும் படிக்க : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!
தேவதை எண்கள் தரும் உண்மையான பயன்:
நீங்கள் இவற்றை தெய்வீக குறியீடுகளாக பார்க்கிறீர்களா, அல்லது மனவியல் சார்ந்த நினைவூட்டலாக கருதுகிறீர்களா என்பது முக்கியமில்லை. இந்த எண்கள் ஒரே ஒரு நோக்கத்தையே நிறைவேற்றுகின்றன. நீங்கள் உங்களது சிந்தனை, உணர்வு, பயணம் ஆகியவற்றை அதிகம் கவனிப்பதற்கு உதவுகின்றன. அவை உங்களின் விருப்பங்களையும் பாதையையும் தெளிவாக பார்க்கச் செய்கின்றன.