சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர பூஜை நிறைவு.. நாளையுடன் நடை அடைப்பு.. நெய் அபிஷேகம் இன்று நிறைவு..
Sabarimala Ayyappan temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 31ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, நாளை இரவு குருதி பூஜை நடைபெற உள்ளது. அதன் பின்னர், நாளை இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர பூஜை நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜை நிறைவடைந்த நிலையில், நாளை (ஜனவரி 19) வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துகு அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக 2025ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க : தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!
டிசம்பர் 28ல் மண்டல பூஜை நறைவு:
இவ்விழாவின் சிகர நிகழ்வான மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, டிசம்பர் 28ம் தேதி மண்டல காலம் நிறைவுபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மகரஜோதி தரிசனம்:
இதனிடையே, கடந்த 14ஆம் தேதி ஐயப்பனுக்கு பாரம்பரிய நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அன்று மாலை பொன்னம்பலம் மேட்டில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் திகழ்கிறது. மகரஜோதியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாலை அணிந்து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்தர்கள், பொன்னம்பலமேட்டில் மகரஜோதியைக் காண திரண்டிருந்தனர். ஜோதி தெரிந்ததும், சபரிமலையில் திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் சரணகோஷங்கள் முழங்க தரிசித்தனர்.
இதையும் படிக்க: திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..
நாளையுடன் தரிசனம் நிறைவு:
தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 31ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, நாளை இரவு குருதி பூஜை நடைபெற உள்ளது. அதன் பின்னர், நாளை இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து, நாளை மறுநாள் (ஜனவரி 20) காலையில் பந்தள ராஜ வம்சப் பிரதிநிதியின் பிரத்யேக தரிசனத்துக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. மண்டல, மகரவிளக்கு விழாக்களில் இதுவரை சுமார் 54 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.