ஆடி அமாவாசை.. தமிழகம் முழுவதிலும் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..
Aadi Amavasai 2025: ஆடி அமாவாசை முன்னிட்டு சென்னையில் இருக்கக்கூடிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் ஆயிரம் கணக்கான மக்கள் அதிகாலை முதலே வருகை தந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளிலும் மக்கள் முன்னோர்களை வழிப்பட்டு வருகின்றனர்.

ஆடி அமாவாசை: 2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமாவாசைகளின் மிக முக்கியமான அமாவாசை இந்த ஆடி அம்மாவாசை தான். இந்நாளில் நம் முன்னோர்களை வேண்டி தர்ப்பணம் செய்வது மிகவும் சிறந்ததாகும். மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் மூன்று அமாவாசைகள் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாகளய அமாவாசை இந்த மூன்று அம்மாவாசைகளில் நம் முன்னோர்களை வழிபட்டு திதி கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது. அதாவது அமாவாசை அன்று நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்மை பார்த்து செல்வார்கள் என்பது ஐதீகம். ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களிலும் காலை முதல் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மயிலாப்பூர் கோயிலில் குவிந்த மக்கள்:
ஆடி அமாவாசை முன்னிட்டு சென்னையில் இருக்கக்கூடிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் ஆயிரம் கணக்கான மக்கள் அதிகாலை முதலே வருகை தந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் மக்கள் தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடி வருகின்றனர்.
Also Read: 2025 ஆடி அமாவாசை.. தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்!
நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்:
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு பகல் நேரம் முழுவதும் பொதுமக்களுக்காக நடை திறக்கப்பட்டு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், காவிரி ஆறு, மதுரை வைகை ஆறு உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய நீர் நிலைகளை ஆயிரம் கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த நீர் நிலைகளில் நீராடி வருகின்றனர்.
Also Read: ஆடி செவ்வாயில் முருகன் வழிபாடு.. என்னென்ன பலன்கள் தெரியுமா?
ஆடி அமாவாசை என்பது அமாவாசைகளிலேயே பெரிய அமாவாசையாகும். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசைகளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடவில்லை என்றாலும் இந்த ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மாகளய அம்மாவாசை மூன்று அம்மாவாசைகளில் நாம் முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுத்து வந்தாலே போதும் என தெரிவிக்கின்றனர்.