Astrology: மகாலட்சுமி ராஜ யோகம்.. 3 ராசிகள் காட்டில் அதிர்ஷ்ட மழை தான்!
Maha Lakshmi Raj Yoga: 2025 ஆகஸ்ட் 25 அன்று, சந்திரன் மற்றும் செவ்வாய் கன்னி ராசியில் இணைந்து மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. இதனால் கடகம், கன்னி, கும்பம் ராசிகளுக்கு நிதி வளர்ச்சி, தொழில் வாய்ப்புகள், திருமணம் போன்ற நற்பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பு, கடன் பிரச்னை தீர்வு ஆகியவை இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

ஜோதிடப்பலன்
ஜோதிடத்தை பொறுத்தவரை ஒரு மனிதருடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில் நவக்கிரகங்கள் மிக முக்கியமான பணியை மேற்கொண்டு வருகின்றன. அப்படியா நிலையில் எல்லா கிரகங்களும் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணையும் சூழல் உருவாகும். இதன் காரணமாக, பல நல்ல மற்றும் எதிர்மறை யோகங்களும் உருவாகின்றன.அவை 12 ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைகின்றது. இப்படியான நிலையில் சுப யோகங்களில் ஒன்றான மகாலட்சுமி ராஜ யோகம் செல்வம் , செழிப்பு, கலை மற்றும் வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, மகாலட்சுமி ராஜ யோகம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இணைப்பால் உருவாகிறது. அந்த வகையில் 2025, ஆகஸ்ட் 25 அன்று, சந்திரன் காலை 8:28 மணிக்கு கன்னி ராசியில் நுழைகிறது. செவ்வாய் ஏற்கனவே அங்கே இருக்கும் நிலையில் இரண்டு கிரகங்களும் இணைவதால் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது, இதன் காரணமாக 3 ராசிக்காரர்கள் சிறப்பு பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
பலன்களைப் பெறும் 3 ராசிகள்
- கடகம்: மகாலட்சுமி ராஜ யோகம் காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வாகனம், வீடு அல்லது தேவையான எந்தப் பொருளையும் வாங்கும் நிலை வரும். மனம் விரும்பும் பொருட்களை வாங்குவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் கலையில் இருக்கும் முன்னேற்றம் உங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரைத் தரும். ஆரோக்கியமும் மேம்படும். வியாபார வளர்ச்சிக்காக போடும் வணிகத் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு திடீரென்று ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். அதன்மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள்.
- கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். உங்கள் உடல்நலம் மேம்படும், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் வரும். நீங்கள் ஏற்கனவே பணத்தை முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு பெரிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாய வாய்ப்புகள் அமையும்.
- கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் மகாலட்சுமி ராஜயோகம் அமைவதால் இந்த காலக்கட்டத்தில் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் சக்தி அதிகரிக்கும். உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்த நிலைக்கு வரும். உங்கள் திறமை அதிகரிக்கும். இதன் காரணமாக மிகப்பெரிய சவால்களை எளிதாக முடிப்பீர்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி ஆதாய முயற்சிகள் கைகூடும்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை.டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)