மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026: பெண்கள் தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் அறிவிப்பு

Madurai Meenakshi Thirukalyanam 2026: மீனாட்சி திருக்கல்யாணம் 2026 ஏப்ரல் 28 அன்று நடைபெறுகிறது. முகூர்த்த நேரத்தில் தாலிச்சரடு மாற்றுவது சிறப்பாக கருதப்படுகிறது. மாற்ற முடியாதவர்கள் மாற்று நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம். பெண்களுக்கு சில வழிமுறைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026: பெண்கள் தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் அறிவிப்பு

பெண்கள் தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் அறிவிப்பு

Updated On: 

27 Apr 2026 12:16 PM

 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இந்த ஆண்டும் பக்தி பரவசத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த திருவிழாவை சிறப்பிக்கின்றனர். திருமணத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகமும், மாசி வீதிகளும் அலங்கார மின்விளக்குகளால் ஒளிர்கின்றன. இந்த நிகழ்வு மதுரையின் பண்பாடு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தின் பெருமையை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.

சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் சிறப்பு

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை நேரங்களில் அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் நிகழ்வுகளாக நடத்தப்படுவது இந்த திருவிழாவின் தனிச்சிறப்பாகும். பக்தர்கள் பெரும் திரளாக திரண்டு இந்த நிகழ்ச்சிகளை நேரில் காண்கிறார்கள்.

பட்டாபிஷேகம் நிகழ்வு முக்கியம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 26ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னை மீனாட்சி மதுரையின் அரசியாக முடிசூடி காட்சியளித்த இந்த நிகழ்வு பக்தர்களுக்கு அபூர்வ ஆனந்தத்தை அளித்தது. வைர கிரீடம், பரிவட்டம் மற்றும் வெள்ளி செங்கோல் ஆகிய அலங்காரங்களுடன் அன்னை மீனாட்சி கம்பீரமாக காட்சியளித்தது விழாவின் சிறப்பை மேலும் உயர்த்தியது.

திருக்கல்யாணம் 2026 தேதி மற்றும் சிறப்பு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த திருவிழாவை தங்கள் குடும்ப விழாவாகவே கருதி மதுரை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். திருமண நேரத்தில் பெண்கள் தாலிச்சரடு மாற்றிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் நீண்ட ஆயுள், சுமங்கலி நிலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Also Read: சித்திரை திருவிழா.. “ஓம் நமச்சிவாய” கோஷத்துடன் அசைந்து வந்த தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்!

தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம்

திருக்கல்யாண முகூர்த்த நேரமான காலை 08.35 முதல் 08.59 வரை தாலிச்சரடு மாற்றுவது மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் மாற்ற முடியாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரை மாற்றிக் கொள்ளலாம். காலை 9.00 முதல் 10.30 வரை எமகண்ட நேரம் என்பதால் அந்த நேரத்தில் மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். முகூர்த்த நேரத்தில் மாற்றுவது அதிக ஆன்மிக பலனை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

பெண்கள் கவனிக்க வேண்டியவை

மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் பூஜை அறைக்குள் செல்லாமல் வெளியிலிருந்து தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் இந்த ஆண்டு தவிர்த்து, அடுத்த ஆண்டு அல்லது பிற நல்ல நாளில் மாற்றுவது சிறந்ததாக கூறப்படுகிறது. அனைவரும் கட்டாயமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை; விருப்பமுள்ளவர்கள் மட்டும் மாற்றிக் கொள்ளலாம். மேலும், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என்றாலும் திருக்கல்யாண நேரத்தில் தாலிச்சரடு மாற்றுவதில் எந்தத் தோஷமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?