Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அனுமன் ஜெயந்தி 2025: வழிபடுவதற்கு சிறந்த நேரம் எது? எப்படி வழிபடுவது?

Hanuman Jayanti 2025: மாணவர்கள் கல்வியில் முன்னேறவும், கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் அனுமன் வழிபாடு செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் அம்மாவாசையும் மூல நக்ஷத்திரமும் தொடர்புடைய நாளே அனும ஜெயந்தியாகக் கணக்கிடப்படுகிறது. சில ஆண்டுகளில் திதி - நக்ஷத்திர வேறுபாடு இருப்பதால், அந்தந்த ஊர்களில் கோவில் மரபின்படி வழிபாடு செய்யலாம்.

அனுமன் ஜெயந்தி 2025: வழிபடுவதற்கு சிறந்த நேரம் எது? எப்படி வழிபடுவது?
அனுமன் ஜெயந்தி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Dec 2025 15:25 PM IST

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும், தான் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் மீது எவ்வளவு அன்பும் எவ்வளவு பக்தியும் இருக்க வேண்டும் என்பதை உலகத்திற்கு ஒரு வடிவமாக காட்டியவர் ஆஞ்சநேயர். எங்கு ஆஞ்சநேயரை பார்த்தாலும் கை கூப்பிய நிலையில் தான் காண முடியும். ஏனெனில், அவர் எப்போதும் தன் தலைவனான ராமனை நினைத்துக் கொண்டே இருப்பவர். ஆஞ்சநேயர் முன்னால் நின்றால் ராமனை நினைக்காமல் இருக்க முடியுமா? “ஸ்ரீ ராம ஜெயம்” என்று சொல்லும் போது ராமன் நம் மனதில் வருகிறார். தன் தலைவன் முன்னால் நின்றபோது வணங்காமல் இருக்க முடியாது என்பதற்காகவே, ராம நாமத்தையும், அதை ஜபிப்பவர்களையும் வழிபடக்கூடிய மிகச் சிறந்த பக்தனாக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

Also Read : காலை நேரத்தில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்… வாஸ்து சொல்வதென்ன?

ராமாயண காவியத்தின் ஆனிவேராகவே அனுமன் இருந்தார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராமாயணம் நிறைவடையும் போது, ராமனே அனுமனின் கரங்களைப் பிடித்து, “உன்னால் தான் இந்த காவியம் சிறப்புற்றது” என்று வாழ்த்தியதாக கூறப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் “ஸ்ரீ ராம ஜெயம்” என்ற தாரக மந்திரத்தை ஜபிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் ஆஞ்சநேயரே. இவ்வாறு, ஆஞ்சநேயர் குறித்தும், அனுமன் ஜெயந்தி குறித்தும் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி ஆத்ம ஞான மையம் எனும் அவரது யூட்யூப் சேனலில் விளக்கமளித்துள்ளார்.

 கர்ப்பிணிகள் சுந்தர காண்டம் படிக்கலாம்:

ராமாயணத்தில் அனுமனின் வீர தீரச் செயல்கள் இடம்பெறும் பகுதி சுந்தர காண்டம். மனக்கவலை, குடும்ப பிரச்சினை, குழந்தை பாக்கியம் போன்ற நேரங்களில் ராமாயணம், குறிப்பாக சுந்தர காண்டம் படிக்கும் வழக்கம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் சுந்தர காண்டத்தை படிக்கவோ, கேட்கவோ செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.

கல்வியில் முன்னேற அனுமன் வழிபாடு:

இவ்வளவு சிறப்புகளுக்கு உரிய அனுமனை கொண்டாடும் நாளே அனும ஜெயந்தி. நவக்கிரக தோஷம் அதிகமாக உள்ளது என்று நினைப்பவர்கள், சனி பகவானின் தொல்லையிலிருந்து நிவர்த்தி பெற, அனும ஜெயந்தி வழிபாடு மிகவும் சிறந்ததாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேறவும், கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் அனுமன் வழிபாடு செய்யப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி எப்போது?

அனும ஜெயந்தி மார்கழி மாதத்தில் அமாவாசையும் மூல நக்ஷத்திரமும் இணையும் நாளாக கணக்கிடப்படுகிறது. சில ஆண்டுகளில் திதி, நக்ஷத்திரம் ஒன்றாக வராததால், அமாவாசையை கணக்கிட்டு பல இடங்களில் அனும ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்தந்த ஊர்களில் உள்ள கோயில் வழக்கத்தைப் பின்பற்றுவது சிறந்தது.

Also Read : பாதி வாளி நீர்.. குளியலறை முடி.. பாத்ரூமில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

எப்படி வழிபட வேண்டும்:

இந்த நாளில் வீட்டில் அனுமன் படம் இருந்தால், அதை அலங்கரித்து துளசி, சந்தனம் வைத்து, வடமாலை அல்லது வடை, வெண்ணை போன்ற நைவேத்தியம் வைத்து வழிபடலாம். பெரிய ஏற்பாடு செய்ய முடியாதவர்கள், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து துளசியால் அர்ச்சனை செய்தாலே போதும். வழிபாட்டின் போது “ஸ்ரீ ராம ஜெயம்” என்ற தாரக மந்திரத்தை ஜபிக்கலாம். அனுமன் சாலிசா அல்லது அனுமன் துதியையும் பாராயணம் செய்யலாம்.