தைப்பூசம்: மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு..என்ன அது!

Marudhamalai Murugan Temple: மருதமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம்: மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு..என்ன அது!

மருதமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வாகனங்களுக்கு தடை

Published: 

23 Jan 2026 10:58 AM

 IST

கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ( திங்கள்கிழமை) தைப்பூச கொடி ஏற்றம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 25-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 6:30 முதல் 7:00 மணிக்குள் தைப்பூச கொடி ஏற்றம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசதன்று முருகன் திருக்கல்யாணம், மாலை 3 மணிக்கு திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2- ஆம் தேதி ( திங்கட்கிழமை) மாலை 4:30 முதல் 7: 30 மணிக்குள் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

தைப்பூசத் திருவிழாவுக்காக வருகை தரும் பக்தர்கள்

பிப்ரவரி 3- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) மாலை 4:30 மணிக்கு கொடி இறக்குதல், பிப்ரவரி 4-ஆம் தேதி ( புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வசந்த உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூர் மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். இதனால், தைப்பூச நாளில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்திருப்பர்.

மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!

மருதமலைக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

இதனால், கோவில் வெளிப்புறத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். எனவே, அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், வரும் ஜனவரி 30- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி ( திங்கள்கிழமை) வரை மருதமலை மலை கோவிலுக்கு பக்தர்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் சார்பில் பேருந்து

மேலும், மலைபடிகள் அல்லது கோவில் சார்பில் பேருந்து ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இந்த பேருந்துகளில் பக்தர்கள் பயணம் செய்து மலைக் கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது, பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், தரிசனத்தில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளஇன் போது, பக்தர்களின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கமாகும். இதே போல, இந்த ஆண்டும் பக்தர்களின் வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா…கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..