சனி பிரச்னையால் அவதியா? – செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

Lord Shani Dev: சனி கிரகத்தின் சுழற்சியால் ஏற்படும் ஏழரை சனி காலத்தில் நிகழும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் பல பரிகாரங்களை பரிந்துரைக்கிறது. இந்த பரிகாரங்கள் சனியின் எதிர்மறை விளைவுகளை குறைத்து நன்மைகளைப் பெற உதவும் என நம்பப்படுகிறது.செவ்வாய் நாம் செய்ய வேண்டிய விஷயங்களைக் காணலாம்.

சனி பிரச்னையால் அவதியா? - செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

சனி பகவான்

Published: 

25 Sep 2025 12:58 PM

 IST

ஜோதிடத்தில், 9 வகையான கிரகங்கள் உள்ளது. இவற்றில் சனி கிரகம் கர்ம பலனாகக் கருதப்படுகிறது. சனியின் செல்வாக்கு வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுவருகிறது. ஒருவர் பிறந்த நாளில் சனியால் பாதிக்கப்படும்போது, ​​அவர்கள் சிரமங்கள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், சரியான பரிகாரங்கள் மற்றும் சரியான நேரத்தில் பூஜைகள் சனி பகவானின் தொந்தரவான விளைவுகளைக் குறைக்கும் என சொல்லப்படுகிறது.ஜோதிடத்தில், சனி பகவான் ஒன்பது கிரகங்களில் ஒரு முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார்.

ஒரு ராசியின் முதல், இரண்டாவது மற்றும் பன்னிரண்டாவது வீடுகளில் சனி சஞ்சரிக்கும் போது, ​​அந்தக் காலம் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது. இது மூன்று ராசிகளையும் ஒரே நேரத்தில் பாதிக்கிறது. இதன் விளைவு ஏழரை ஆண்டுகள் நீடிக்கும். இந்த நேரத்தில், ஒரு நபர் தொழில் தடைகள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி சிக்கல்கள் போன்ற பல சவால்களை எதிர்கொள்வார் என்று நம்பப்படுகிறது.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒன்பது கிரகங்களில் சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் மக்களின் கர்மாவிற்கு ஏற்ப பலன்களை அளிப்பதாக நம்பப்படுகிறது.

Also Read: சனி பகவானுக்கு பிடித்த எண்.. இந்த எண் ராசிக்கார்களுக்கு சனி ஆசி தேடி வரும்!

ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பரிகாரங்கள்

யார் ஒருவர் சனியின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களின் வாழ்வில் எழக்கூடியஎதிர்மறை விளைவுகளைக் குறைக்கக்கூடிய சில தீர்வுகளை ஜோதிடம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த பரிகாரங்களைச் செய்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.நாம் செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றிக் காணலாம்.

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை என்பது சனி பகவானின் நண்பராகக் கருதப்படும் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனுமன் விசுவாசத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நாம் ஹனுமனை வழிபடுவது சனி பகவானை மகிழ்விக்கும் என நம்பப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு சனியின் எதிர்மறை விளைவுகள் குறையும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை நாளில் காலையில் குளித்த பிறகு, குறைந்தது 11 முறை அனுமனை வணங்கி விட்டு அவனுக்குரிய சாலிசா பாராயணம் செய்யுங்கள். துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ள நிலையில் தற்போது பிறமொழிகளிலும் கிடைக்கிறது.

Also Read: சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? – ஆன்மிக வழிகள் இதோ!

இன்றைய நாளில் முடிந்தவர்கள் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யுங்கள். இந்த பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அனுமனுக்கு செவ்வாய்க்கிழமை நாளில் வீட்டிலும் அல்லது அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வேர்க்கடலை, குங்குமம் மற்றும் மல்லிகை எண்ணெய் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவும்.
அனுமனுக்கு பூந்தி நைவேத்தியமாக வழங்குங்கள். இந்த பிரசாதத்தை ஏழைகளுக்கு விநியோகித்தால் சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கையாகும்.

(ஆன்மிக ரீதியான இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)