தினமும் 10 விநாடிகள் போதும்.. சங்கு ஊதுவதால் இவ்வளவு நன்மைகளா?
Conch Spiritual Benefits: சங்கு ஊதுவதால் ஏராளமான நன்மைகள் உண்டு. தினமும் 10 வினாடிகள் சங்கு ஊதுவதால் சுவாசம் சீராகும், உடல் ஆரோக்கியம் மேம்படும், மன அமைதி கிடைக்கும், மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையாகும். ஆன்மீக ரீதியாகவும் சக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சங்கு
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் ஏதேனும் ஒரு வகையில் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் கடல் வாழ் நத்தையின் கூடான சங்கு வெறும் ஓடாக மட்டும் பார்க்கப்படுவது இல்லை. இந்து மதத்தில் சங்கு ஒரு புனித பொருளாகும். அனைத்து பூஜை விழாக்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். சங்கு தூய்மை மற்றும் மங்களத்தின் சின்னமாக அறியப்படுகிறது. இது நேர்மறையான ஆற்றல்களை பரப்பும் தன்மை கொண்டது. பூஜைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் நாம் சங்கு ஊதுவது ஒரு முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது. இது அந்த மங்கள நிகழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சங்கு விஷ்ணுவுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் சங்கைப் பற்றி அறிந்திருப்பதில்லை.அந்த வகையில் ஒரு நாளைக்கு 10 வினாடிகள் மட்டுமே சங்கு ஊதுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகளைப் பற்றி காணலாம்.
சங்கு ஊதுவதன் நன்மைகள்
சுற்றுச்சூழல் தூய்மை: சங்கு ஒலி சக்திவாய்ந்த அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்த அதிர்வுகள் உடல், மனம் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பரவுகின்றன. அவை எதிர்மறை சக்தியை நீக்கி பாசிட்டிவ் எண்ணங்களை பரப்புகிறது. இதனால் நாம் இருக்குமிடம் அமைதியாகவும் ஆன்மீகமாகவும் மாறும். உதாரணமாக, சங்கு ஒலியைக் கேட்டவுடன் நம்மை அறியாமல் உடல் சிலிர்த்து ஒரு உணர்வு தோன்றும்.
உடல் நிலை மேம்படுதல்: சங்கு ஊதுவதற்கு சில வழிமுறைகள் உண்டு. அதன்படி அதனை ஊத ஒருவர் நிமிர்ந்து நிற்க வேண்டும். முதுகெலும்பு சற்று வளைந்து, மார்பு திறந்திருக்க வேண்டும். இந்த செயல்முறை நல்ல ஆசனமாக பார்க்கப்படுகிறது. சங்கு ஊதுவதைத் தொடர்ந்து செய்வது உடல் ஆரோக்கியம் மேம்படும்.
Also Read: நெய் தீப வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
நல்ல சுவாசம்: சங்கு ஊதுவதற்கு, நன்கு ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்த எளிய செயல்முறை சுவாச அமைப்பை பலப்படுத்துகிறது. இது நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சங்கு ஒலி நன்மை பயக்கும். இது ஆழமான சுவாசத்தை ஊக்குவிக்கிறது.
ஆன்மீக சக்தி: சங்கு ஊதுவது ஒரு நபரை அவர்களின் உயர்ந்த உணர்வுடன் இணைக்கிறது. தெய்வீக சக்தியை அழைப்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக அனுபவத்தை உருவாக்குகிறது. சங்கு ஊதப்படும்போது, ஆற்றலும் ஒலியும் அதை ஊதுபவரின் காதுகளை அடைகின்றன. அது உடனடியாக மனதை அமைதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: வீட்டில் மயிலிறகை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. வாஸ்து சொல்வது என்ன?
சங்கை கையாளும் முறை
சங்கு ஊதுவது கடினம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அதன் சரியான முறையை அறிந்தால் மிகவும் எளிதானது. முதலில், உங்கள் வாயை ஒரு சிறிய ‘O’ வடிவத்தில் குவிக்கவும் உங்கள் மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும். இப்போது, அந்தக் காற்றை சிறிய ‘O’ வடிவ வாய் வழியாக வெளியிடவும். உங்கள் மற்றொரு கையால், சங்குக்கு அடுத்துள்ள சிறிய துளையை மூடவும். இந்த பயிற்சியின் மூலம், நீங்கள் மூச்சுப் பயிற்சியை எளிதாகச் செய்ய முடியும்.