Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எப்போதும் கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்!

நடிகை நளினி அவர்களின் கருமாரியம்மன் அன்னையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த அதிசய நிகழ்வுகளையும் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கருமாரியம்மன் புகைப்படத்தை வெளியே எறிந்ததன் விளைவாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் தொடங்கி குழந்தை பிறப்பு வரை அதில் பேசியிருப்பார். அதனைப் பற்றிக் காணலாம்.

எப்போதும் கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்!
நடிகை நளினி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 07 May 2025 09:53 AM

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் ஆன்மிக நம்பிக்கையில் வெவ்வேறு வகையான கருத்துகள் உள்ளது. அதில் சிலர் வெளிப்படையாகவே தெய்வ சக்தியை உணர்ந்த தருணங்கள் பற்றி பேசுவார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி (Actress Nalini). இன்றளவும் எங்கு சென்றாலும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் (Devi Sri Karumariamman) புகழைப் பரப்பும் மிகப்பெரிய பக்தை என்றே சொல்லலாம். அவர் நேர்காணல் ஒன்றில் தன் வாழ்வில் நடந்த சில அதிசய நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதில், “எங்கள் வீட்டில் மிகப் பெரிய அளவில் கருமாரியம்மன் புகைப்படம் ஒன்று இருக்கும். ஒருமுறை எனக்கும் என் மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவர் இதெல்லாம் வீட்டிற்கு ஆகாது எனக் கூறி கருமாரி அம்மன் புகைப்படத்தை வெளியே ஏறிந்து விட்டார்.

அதன் பிறகு அதுவரை மிகவும் ஒல்லியாக இருந்த எனக்கு உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட தொடங்கியது. உடம்பு முழுக்க அரிப்பது போன்று இருந்தது. என்னுடைய மாமியார் அதனைப் பார்த்து பயந்துவிட்டார். மருத்துவமனை சென்று எவ்வளவு பரிசோதனை எடுத்தாலும் என்ன பிரச்சனை என தெரியவில்லை. ஆனால் வீக்கம் மட்டும் கூடிக் கொண்டே செல்கிறது. நான் தேவி கருமாரியம்மன் புகைப்படத்தை வெளியே தூக்கி எறிந்து விட்டார்கள் அது இருந்தால்தான் நான் உள்ளே வருவேன் என கூறிவிட்டேன்.

ஆனால் என்னுடைய கணவர் ராமராஜன் நீ என்னை இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாய். இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு ஆகாது. நாம் கருப்பசாமி கும்பிடுபவர்கள் என கூறினார். இதனையடுத்து ஒரே ஒருமுறை என்னை கருமாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்தேன். அதன்படி அங்கு சென்று திரும்பி வீட்டிற்கு வருவதற்குள் வீங்கிய என் உடம்பு மறுபடியும் பழைய தோற்றத்திற்கு மாறியது. இதனைக் கண்டு மிரண்டு போன எனது மாமியார் தூக்கி எறிந்த கருமாரியம்மன் புகைப்படத்தை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டார்” என தெரிவித்தார்.

எப்போதும் உடன் இருக்கும் அம்மன் 

அதேபோல் எனது மகன் சிஏ படித்த நிலையில் அவன் தேர்ச்சி அடைய மாட்டான் என நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் முதல் முயற்சியிலேயே கண்டிப்பாக அவன் வெற்றி பெறுவான் என எனக்கு கருமாரியம்மன் வாக்கு கிடைத்திருந்தது. அது போல் நடந்தது. அது மட்டுமல்லாமல் எனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரூபாய் 40 லட்சம் செலவாகி இருந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக அம்மனுக்கு ஆடை எடுத்து வழிபாடு செய்தோம்.

அப்போது அருள் வாக்கு மூலமாக இந்த கல்யாணம் நடக்காது என நெகட்டிவாக வந்தது. கடைசியில் சொன்னபடி அந்த கல்யாணம் நடக்கவே இல்லை. வெளிநாட்டில் இருக்கும் எனது மகன், மகள் இருவரும் எதுவாக இருந்தாலும் உன் அம்மாவிடம் கேட்டு சொல் என சொல்லும் அளவுக்கு அந்த சக்தி உள்ளது என்பதை நான் நம்புகிறேன். கருமாரியம்மன் எப்போதும் என் உடனே இருக்கிறாள்” என நடிகை நளினி தெரிவித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் எனக்கு இரட்டை குழந்தைகள்.

நான் இருந்த தெருவில் இரு முனைகளிலும் அண்ணன், சித்தி வீடு இருந்தது. இரட்டை குழந்தைகளை சுமக்க முடியவில்லை. நான் இரண்டு பேர் வீட்டிலும் தலா ஒரு குழந்தையை விட்டுவிடுகிறேன் என விளையாட்டாக சொன்னேன். ஆனால் உண்மையில் நீண்ட நாட்களாக குழந்தை சத்தம் கேட்காத இருவர் வீட்டிலும் இருந்த அண்ணி, சித்தி இருவரும் கர்ப்பம் தரித்து குழந்தைகள் பெற்றெடுத்தார்கள் என நளினி தனது ஆன்மிக அனுபவங்களைப் பற்றி பேசியிருப்பார்.