தமிழக சட்டமன்ற தேர்தல்… களமிறங்கும் மத்திய அமைச்சர்கள் குழு? பாஜக தலைமையின் பலே திட்டம்! | TV9 Tamil News

தமிழக சட்டமன்ற தேர்தல்… களமிறங்கும் மத்திய அமைச்சர்கள் குழு? பாஜக தலைமையின் பலே திட்டம்!

Updated On: 

03 Mar 2026 19:20 PM

 IST

Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவை இறக்குவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவானது மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளதாக கூறப்படுகிறது.

1 / 5தமிழகத்தில்  சட்டமன்றத் தேர்தலில்  வெற்றியை இலக்காக வைத்து  அரசியல் கட்சிகள்  கூட்டணி பேச்சுவார்த்தை,  தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.  திமுக கூட்டணியில்  தற்போது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதே போல, அதிமுக, பாஜக  உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திக்க உள்ளது.  இதற்காக,  அதிமுக மற்றும் பாஜக  தலைவர்கள்  தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை இலக்காக வைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

2 / 5

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி இருந்தார். இதை தொடர்ந்து, 2- ஆவது முறையாக மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்று பேசியிருந்தார். இதே போல, திருச்சி மற்றும் வேலூரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

3 / 5

இவ்வாறாக தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், மத்திய பாஜக தலைமை மேலும் ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தொடர்ந்து மத்திய பாஜக அமைச்சர்களை தமிழக பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக களம் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 3 மாவட்டங்களுக்கு ஒரு மத்திய அமைச்சர் என தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி மக்களை நேரடியாக சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

4 / 5

இதில், மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கழிவறை திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம், சமையல் எரிவாயு உருளை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து பொது மக்களுக்கு நேரடியாக எடுத்துச் சொல்லி மத்திய அமைச்சர்கள் ஆதரவு திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் நற்பெயர் ஏற்பட்டு அது வாக்குகளாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

5 / 5

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட 8 அமைச்சர்கள் தமிழகத்தில் களமிறக்கப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow Us