தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி..”வி”-இல் தொடங்கும்..எந்த தொகுதி அது! | TV9 Tamil News

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி..”வி”-இல் தொடங்கும்..எந்த தொகுதி அது!

Updated On: 

27 Feb 2026 11:26 AM

 IST

TVK Leader Vijay: தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருக்கக் கூடிய ஒன்றாகும். இதற்கு பதில் அளிக்கும் விதமாக "வி" என தொடங்கும் 3 தொகுதியை விஜய் தேர்வு செய்துள்ளாராம். அதில், ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5தமிழக வெற்றிக் கழகம்  முதல் முறையாக வருகிற சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது.  இந்த தேர்தலில் வெற்றி பெற்று உறுதியாக ஆட்சியை பிடித்தே தீருவோம்  என்ற முனைப்பில்  கட்சியின் தலைவர் விஜய் உள்பட  அனைவரும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.  அதன்படி,  தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும்  தமிழக வெற்றி கழகம் களம் காண உள்ளது. அதற்கான பணிகளில் கட்சியினர் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக வருகிற சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று உறுதியாக ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற முனைப்பில் கட்சியின் தலைவர் விஜய் உள்பட அனைவரும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் களம் காண உள்ளது. அதற்கான பணிகளில் கட்சியினர் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2 / 5

தவெக தலைவர் விஜய்

3 / 5

விஜய் கட்சி தொடங்கிய போது, வெற்றியை குறிக்கும் வகையில் வி என தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து, அந்த பகுதியில் மாநாட்டை நடத்தினார். அதன்படி, தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதே போல, விஜய் போட்டியிட கூடிய தொகுதி வி என்ற எழுத்தில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, விக்கிரவாண்டி, விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகள் விஜயின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

4 / 5

இந்த 3 தொகுதியில் விஜயின் முதல் தேர்வாக இருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆகும்.ஏனென்றால், அவரது கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற இடம் என்பதாலும், தமிழக வெற்றி கழகத்தின் வரலாற்றில் முத்திரை பதித்த தொகுதி என்பதாலும், இந்த தொகுதியை தனது முதல் தேர்வாக விதை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

5 / 5

எனவே, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டால், தனது தொகுதியில் பிரச்சாரம் செய்வதோடு மட்டுமின்றி, பிற பகுதிகளுக்கும் எளிதாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டி தொகுதியில் உறுதியாக போட்டியிடுவார் என்று இந்த மாவட்டத்தை சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் பனையூர் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us