Curd Vs Yogurt – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?

Curd Vs Yogurt : தயிர் மற்றும் யோகர்ட் இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. செய்முறையில் இருந்து பலன்கள் வரை இரண்டும் வெவ்வேறானவை. இந்த கட்டுரையில் தயிருக்கும் யோகர்ட்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து பார்க்கலாம்.

Curd Vs Yogurt - இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Jun 2025 16:18 PM

தயிர் (Curd) மற்றும் யோகர்ட் (Yogurt) பெரும்பாலும் பலர் குழப்பமடைகின்றனர். காரணம் இரண்டுக்கும் தமிழில் தயிர் என்று தான் அரத்தம்.  அதனால் இவை இரண்டும் பெரும்பாலும் ஒன்றுதான் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் தோற்றமும் அமைப்பும் ஒத்திருந்தாலும், இரண்டும் வேறுபட்டவை. தயிர் மற்றும் யோகர்ட் ஆகியவை  தயாரிக்கப்படும் விதமும் அவை வழங்கும் நன்மைகளும் வெவ்வேறானவை.  இரண்டும் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பெரும்பாலும் நமது வீடுகளில் தயிரை தான் பயன்படுத்துகிறோம். அவை தயாரிக்கும் முறையும் எளிது. ஆனால் யோகர்ட்டை பொறுத்தவரை அவற்றை வீட்டில் தயாரிப்பது சற்று கடினம்.

தயிர் மற்றும் யோகர்ட்டுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

தயிர் என்பது பச்சைப் பாலை காய்ச்சி  தயாரிக்கப்படும் ஒரு இயற்கை தயாரிப்பு ஆகும். பாலில் காணப்படும் கேசீன் என்ற புரதத்தை பாக்டீரியா உடைப்பதன் மூலம் தயிர் தயாரிக்கப்படுகிறது. இதற்கிடையில், யோகர்ட் இரண்டு வகையான பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி பாலை நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது, தயிரைப் பொறுத்த வரை நம் வீடுகளிலேயே எளிமையாக செய்ய முடியும்.

தயிர் மற்றும் யோகர்ட்டின் ஆரோக்கிய நன்மைகள்

தயிரில் பாந்தோதெனிக் அமிலம், வைட்டமின் பி5, புரதம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது எடை இழப்புக்கு மிகவும் நல்லது. மேலும் தயிர் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்தது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அதேபோல், தயிர் சாப்பிடுவதும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

யோகர்ட்டில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இவற்றை சாப்பிடுவதும் நல்லது. மேலும், பொட்டாசியத்தின் நன்மைகளைக் கொண்ட யோகர்ட், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை அல்லது செயற்கை சுவைகள் சேர்க்கப்படாத யோகர்ட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தயிரின் ஆரோக்கிய நன்மைகள்

கால்சியம் அதிகம் உள்ள தயிர், எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. தயிர் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இவை தலையில் பொடுகைக் குறைக்கவும் உதவுகின்றன. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் உடல் அதிக கார்டிசோலை வெளியேற்றுவதைத் தடுப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட யோகர்ட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சிறந்தது. யோகர்ட் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, முகத்தில் தடவுவதால் சருமத்தை ஒளிரச் செய்தோடு கரும்புள்ளிகளை நீக்கவும் உதவும். கூடுதலாக, யோகர்ட்டை ஹேர் மாஸ்க்குகளாக பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கும் பொடுகைப் போக்குவதற்கும் நல்லது.