Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏன் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன? காரணம் என்ன தெரியுமா?

Airplanes In White Colour: விமானங்கள் நம் பயணங்களை மிகவும் எளிதாக்குகின்றன. பெரும்பாலான விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது தெரியுமா? விமான நிறுவனங்கள் இந்த நிறத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த கட்டுரையில் அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஏன் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன? காரணம் என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Oct 2025 23:08 PM IST

தொலைதூரங்களில் பயணிப்பவர்களுக்கு விமான பயணம் ஏதுவாக இருக்கும். குறிப்பாக ஆயிரக்கணக்கான கி.மீட்டர்களையும் சில விநாடிகளில் கடக்க முடியும். விமானத்தின் காரணமாக உலகமே சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் (Airport) பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. ஆனால் விமான நிறுவனங்கள் ஏன் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விமான நிறுவனங்கள் இந்த நிறத்தை தேர்ந்தெடுப்பதற்கு விபத்து உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணங்கள்

வெப்பத்தை பிரதிபலிக்க உதவும்

விமானங்கள் சூரியனின் கீழ் மணிக்கணக்கில் பறக்கின்றன, மேலும் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் வெயிலில் கிடக்கின்றன. வெள்ளை நிறம் முடிந்தவரை சூரிய ஒளியையும் வெப்பத்தையும் உள்வாங்கிக்கொள்ளாமல் பிரதிபலிக்கிறது. இதனால் அதன் வெப்பத்தை பயணிகள் உணராமல் பார்த்துக்கொள்கிறது. கோடையில் கருப்பு ஆடைகளை அணிவதை விட வெள்ளை ஆடைகளை அணிவது உங்களை குளிர்ச்சியாக்குவது போல, விமானங்களுக்கு வெள்ளை நிறத்தை வழங்குவது கேபினுக்குள் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.

இதையும் படிக்க : சார்ஜரை இரவு முழுவதும் பிளக்-இன் செய்து விட்டுச் செல்கிறீர்களா? இது இவ்வளவு ஆபத்தா..?

சேதங்களை எளிதில் கண்டறிய முடியும்

விமானப் பயணத்தில் பாதுகாப்பு முக்கியமானது. ஆய்வுகளின் போது விரிசல்கள், எண்ணெய் கசிவுகள் அல்லது பிற வகையான மேற்பரப்பு சேதங்களை வெள்ளை நிறம் எளிதில் கண்டறிய உதவுகிறது.

பெயிண்ட் விரைவாக மங்குவதைத் தடுக்கும்

விமானங்கள் அதிக உயரம் பறக்கும்போது காற்று, மழை, பனி மற்றும் கடுமையான சூரிய ஒளி போன்ற கடுமையான வானிலை மாற்றங்களுக்கு ஆளாகின்றன. இதனால் நிறங்கள் மங்கி, எளிதில் உரிந்து போகும். ஆனால் வெள்ளை நிறம் தான் நிலைத்திருக்க சிறந்த நிறம். இது விரைவாக மங்காது, மேலும் விமானம் நீண்ட காலம் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் காட்சியளிக்க உதவும்

மறுவிற்பனை மதிப்பு

ஒரு விமான நிறுவனத்திலிருந்து மற்றொரு விமான நிறுவனத்திற்கு விமானங்கள் விற்கப்படுவது அல்லது குத்தகைக்கு விடப்படுவது பொதுவானது. ஒரு வெள்ளை விமானத்தில் புதிய உரிமையாளர் அடிப்படை நிறத்தை மாற்றாமல் தங்கள் லோகோக்கள் மற்றும் விமான நிறுவனத்தின் பிராண்டிங்கை எளிதாகச் சேர்க்கலாம். இது லோகோ வரைவதில் நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது மற்றும் விமானத்தின் சந்தை மதிப்பை அதிகரிக்கிறது.

இதையும் படிக்க : மழைக்காலத்தில் ஏசி வெப்பநிலை எவ்வளவு வைக்க வேண்டும்..? மின்சார கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்

அவசரநிலைகளிலும் பார்ப்பது எளிது

வெள்ளை நிறம் வானத்தில் தெளிவாகத் தெரியும், இது மோதல்களைத் தவிர்க்க உதவுகிறது. மீட்புப் பணியாளர்கள் அவசரகாலத்தில், குறிப்பாக நீர் அல்லது நிலத்தில், அதன் சுற்றுப்புற நிறங்களுடன் கலக்காமல் இருக்கும் என்பதால், விபத்துக்குள்ளான விமானங்களை விரைவாகக் கண்டுபிடிக்க வெள்ளை நிறம் உதவுகிறது.