7 அடிக்கு மேல் வளர்ந்து பூமியை முத்தமிட்ட வாழைத்தார்.. வியப்பில் கிராம மக்கள்!!

The Banana Stalk: வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த வாழைமரம் உருவாக்கிய அசாதாரண காட்சி கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மிக உயரமாக வளர்ந்த அந்த வாழை, பழங்களின் எடையால் கீழே வளைந்து, தரையைத் தொட்டுவிட்டது. இயற்கையாக உருவான இந்த விசித்திரமான வாழையை அப்பகுதி மக்களும், அருகிலுள்ள கிராம வாசிகளும் கண்டு ரசித்து வருகிறார்கள்.

7 அடிக்கு மேல் வளர்ந்து பூமியை முத்தமிட்ட வாழைத்தார்.. வியப்பில் கிராம மக்கள்!!

7 அடிக்கு மேல் வளர்ந்து பூமியை முத்தமிட்ட வாழைத்தார்.

Updated On: 

21 Nov 2025 15:21 PM

 IST

மேற்குவங்கம், நவம்பர் 21: கவிஞர்கள், ஓவியர்கள், அரசியல் கருத்துகள் ஆகியவற்றின் செழிப்பிடமாகப் பெயர் பெற்ற மேற்குவங்கம், ஒரு வாழை மரத்தால் செய்திகளில் இடம் பிடிப்பது அபூர்வமான ஒன்று தான். அதுவும் சாதாரணமானதை விட பல மடங்கு உயர்ந்து வளர்ந்த ஒரு வாழைமரம் அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அம்மரத்தை காண மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. நாடியா மாவட்டம், புலியா-பரேஷ்நாத்பூரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற இளைஞர் நலத்துறை பணியாளர் நிரஞ்சன் சர்கார். இவர் தன் வீட்டு தோட்டத்தில், வாழைக் கன்றினை நட்டு வைத்துள்ளார். இதிலிருந்து வந்த வாழைக்காய்கள் நிலத்தை தொடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. “பூமியை முத்தமிடும்” அந்த வாழைமரத்தை பார்க்க மக்கள் பேராவலோடு வந்து செல்கிறார்கள்.

Also read: Monsoon Eye Care: மழைக்காலத்தில் கண் தொற்று பாதிப்பா..? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தாவரங்களை நேசிக்கும் மனிதர்:

2009-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிரஞ்சன் எப்போதுமே தாவரங்களை நேசிப்பவர்; அது அவரது தந்தையிடமிருந்து வந்த பழக்கம். ஆனால் அவர் அதீத ஆர்வத்தில் தாவர வளர்ப்பில் ஈடுபட்டவர் அல்ல. “பெங்களூருவில் வளரும் ‘ஆயிரக்கை’ (Hazari) வாழை குறித்து கேட்டேன்; அதன் விசித்திர தன்மைகள் என்னை கவர்ந்தது. அதனால் கடந்த ஆண்டு அதன் ஒரு செடியை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் நாட்டினேன்,” என்றார் நிரஞ்சன்.

கனவிலும் நினைக்காத விஷயம்:

அதன் பின்னர் நடந்தது அவர் கனவிலும் நினைக்காத விஷயம். இரண்டு மாதங்களில் ஒரு முளை வந்தது. பின்னர் மற்றொன்று. இவ்வாறு தொடர்ந்து வந்தது. எட்டு மாதங்கள் ஆனதும் முளை வருவது நிற்கவே இல்லை. இப்போது ஏழடிக்கு மேல் உயரம் கொண்ட தண்டு, சாய்ந்து தரையைத் தொட்டுவிட்டதால், இதை மக்கள் இறைவனின் அருள் எனக் கூறுகிறார்கள். நான் எந்தச் சிறப்பு உரமும் போட்டதில்லை. நட்டபோது கொஞ்சம் உயிர்ச்சத்து உரம், அதுவே தவிர தினசரி தண்ணீர் ஊற்றினேன்,” என்கிறார் நிரஞ்சன்.

இந்த வகை வாழைகள் பொதுவாக சிறியதாக இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவரது பக்கத்து வீட்டுக்காரர் அபிஜித் பிஸ்வாஸ் பேசுகையில், “ஹசாரி வாழை பற்றி கேட்டிருக்கிறோம், ஆனால் பார்க்கவே இல்லை. நிரஞ்சன் பாபுவின் செடி பழம் கொடுக்கும்போது தான் கண்டோம். அவர் எப்போதும் தாவரங்கள், பூக்கள், செடிகள், மூலிகைகள் என பலவகை வளர்த்துக் கொண்டே இருப்பார்” என்றார்.

Also read: Hair Care: முடி வளர்ச்சிக்கு உதவும் முருங்கை இலை மந்திரம்.. இதை எப்படி பயன்படுத்துவது..?

விஞ்ஞானத்தையே மீறி வளர்ந்த மரம்:

தாவரவியல் நிபுணர்கள் கூறுவதாவது, “இந்த வகை வாழை மரங்களுக்கு மேற்குவங்கம் பொருத்தமல்ல. ஆனாலும் இந்தச் மரம் விஞ்ஞானத்தையே மீறி வளர்ந்துள்ளது. ஒரு கல்லூரியின் தாவரவியல் துறைத்தலைவர் ராஜ்குமார் சர்மா கூறுகிறார்: “சிலர் வித்தியாசமான வகைகளை முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்தக் காலநிலையில் சரியான விளைச்சல் கிடைப்பது கடினம். இந்தச் சூழ்நிலையில், நல்ல பராமரிப்பும் சரியான சத்தும் வேலை செய்திருக்கலாம்” என்கின்றனர்.

அதே பராமரிப்பை நிரஞ்சனும் செய்து வந்ததால், தற்போது அந்த வாழையின் நீளமான தண்டு ஒரு உள்ளூர் மக்கள் செல்ஃபி எடுக்கும் இடமாகிவிட்டது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?