Electric Kettle Clean: மின்சார கெட்டிலில் அழுக்கு படிந்த கறைகளா? இதை செய்தால் மிளிரும்!
Electric Kettle Cleaning: காலையில் குடிக்க தண்ணீர் காய வைப்பது முதல் டீ மற்றும் காபி போடுவது வரை பல வகைகளில் இந்த கெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இதை சிறியவர்கள் முதல் எளிதாக பயன்படுத்தலாம் என்பதால் முட்டைகளை வேகவைத்தல் (Eggs) முதல் மேகி தயாரிப்பது வரை அனைத்திற்கும் உதவுகிறது.
இன்றைய காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் மின்சார கெட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழை (Rainy Season) மற்றும் குளிர்காலத்தில் மின்சார கெட்டில்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. காலையில் குடிக்க தண்ணீர் காய வைப்பது முதல் டீ மற்றும் காபி போடுவது வரை பல வகைகளில் இந்த கெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இதை சிறியவர்கள் முதல் எளிதாக பயன்படுத்தலாம் என்பதால் முட்டைகளை வேகவைத்தல் (Eggs) முதல் மேகி தயாரிப்பது வரை அனைத்திற்கும் உதவுகிறது. தங்கும் விடுதிகள், தனியாக வசிப்பவர்கள் என அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்கிறார்கள். இதை நீண்ட நேரம் பயன்படுத்துவதாலும், இதை சரியான சுத்தம் செய்யாததால், இதில் கறை மற்றும் துருப்பிடித்துவிடும்.
பெரும்பாலும் இதை யாரும் சுத்தம் செய்வது கிடையாது. இந்தநிலையில், மின்சார கெட்டிலில் படிந்துள்ள பழைய பிடிவாதமான கறைகளை அகற்றி, கெட்டியை உள்ளே இருந்து எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடலாமா? இது ஆரோக்கியத்தை சீர்குலைக்குமா?




வினிகர் பயன்பாடு:
உங்கள் மின்சார கெட்டிலுக்குள் இருக்கும் மஞ்சள் படிந்த கறைகளை சுத்தம் செய்ய, தண்ணீரில் வினிகரை சேர்த்து கெட்டிலில் நிரப்பவும். சிறிதுநேரம் ஆன் செய்து கெட்டிலை அணைத்துவிட்டால், இது துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல், மஞ்சள் கறைகளை நீக்கும்.
பேக்கிங் சோடா பேஸ்ட்:
உங்கள் கெட்டிலின் உட்புறத்தை சுத்தம் செய்து கறைகள் அல்லது துருவை நீக்க, பேக்கிங் சோடாவில் தண்ணீரை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் கலந்து உள்ளே தடவவும். இதை சில நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், ஒரு பிரஷ் அல்லது இரும்பு ஸ்பாஞ்ச் கொண்டு தேய்க்கவும். இப்போது, தண்ணீரை கொண்டு நன்கு அலசினால் முழுமையாக சுத்தம் ஆகும்.
ALSO READ: ஒரே சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? எத்தனை முறை சூடுபடுத்துவது பாதுகாப்பானது?
இப்படி இருந்தால் எப்படி சுத்தம் செய்வது..?
பலரும் மின்சார கெட்டிலை தண்ணீர் காய மட்டும் பயன்படுத்தாமல் டீ, காபி, மேகி, முட்டை வேகவைத்தல் அல்லது சூப் தயாரித்தல் போன்றவற்றையும் செய்கிறார்கள். இதன்மூலம், உப்பு கறைகளோ அல்லது பிற அழுக்கு படிந்திருந்தால், இதை சுத்தம் செய்வதற்கான சிறந்த வலி எலுமிச்சை சாறு அல்லது கடைகளில் கிடைக்கும் சிட்ரிக் அமில பொடியாகும். அதன்படி, அரை எலுமிச்சை பழத்தின் சாறு அல்லது ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சிட்ரிக் அமில பொடியை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த முறைகளை பயன்படுத்தி, உங்கள் கெட்டிலை சில நிமிடங்களில் சுத்தம் செய்யலாம்.