Hair Care: முடி வளர்ச்சிக்கு உதவும் முருங்கை இலை மந்திரம்.. இதை எப்படி பயன்படுத்துவது..?
Moringa Benefits for Hair Growth: முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் ஏ உச்சத்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இது பொடுகை தொல்லையை தடுப்பது மட்டுமின்றி, இந்த இலையில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடி வேர்களை எளிதில் சென்றடைகிறது.
முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருகிறது. முருங்கைக்காய், முருங்கை இலைகள் (Moringa) போன்றவை பல ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும். இவ்வளவு நன்மைகளை உடலுக்கு கொடுத்தாலும், முருங்கை இலைகள் முடி வளர்ச்சிக்கு உதவும் என்று உங்களுக்கு தெரியுமா..? முருங்கை இலைகளை அழகு பொருளாக பயன்படுத்துவது பற்றி ஒரு சிலருக்கே தெரியும். இது முடியை (Hair Care) புத்துயிர் பெறும் சக்தி கொண்டது. அந்தவகையில், முருங்கை இலை முடிக்கு எவ்வாறு ஊட்டம் தருகிறது..? இதை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: முடிக்கு சீயக்காய் போன்ற ட்ரை ஷாம்பு நல்லதா..? டாக்டர் சஹானா விளக்கம்!
முருங்கை இலை முடிக்கு எப்படி நன்மை பயக்கும்..?
முருங்கை இலைகள் இரும்பின் நல்ல மூலமாகும். மேலும், இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி, பயோட்டின் மற்றும் அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இவை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால் முடி நுண்குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. முடி மற்றும் சருமத்தின் பளபளப்பை பராமரிப்பது கொலாஜனின் செயல்பாடுகளில் அடங்கும். மேலும், முருங்கை இலைகளின் மற்றொரு சிறந்த நன்மை என்னவென்றால், இது முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது. முருங்கை இலைகள் கெரட்டினையும் உற்பத்தி செய்கின்றன. இது முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.




முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் ஏ உச்சத்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இது பொடுகை தொல்லையை தடுப்பது மட்டுமின்றி, இந்த இலையில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடி வேர்களை எளிதில் சென்றடைகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது உங்கள் உச்சந்தலையை உள்ளிருந்து ஊட்டமளிக்கும். முடி பிரச்சினைகள் குறையும்.
ALSO READ: பெண்களின் இந்த 5 பழக்கவழக்கங்கள்.. உங்கள் சருமத்தை முன்கூட்டியே வயதாக்காகும்..!
முருங்கை இலையை எப்படி பயன்படுத்துவது..?
- தூங்க செல்வதற்கு முன் முருங்கை இலைகளை மென்று சாப்பிட்டால், உங்கள் தலைமுடி நம்பமுடியாத அளவிற்கு அழகாகவும், நீளமாகவும் வளரும். முருங்கை பொடி அல்லது முருங்கை சூப் என இரண்டு வகைகளிலும் எடுத்து கொள்ளலாம். இவை இரண்டு கூந்தலுக்கு நன்மை பயக்கும். நீங்கள் முருங்கை இலையை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாகவும் சாப்பிடலாம்.
- அப்படி இல்லையென்றாலும், தண்ணீர் மற்றும் முருங்கை இலையை குக்கரில் வேகவைத்து சாறு வடிவிலும் எடுத்து கொள்ளலாம்.இருப்பினும், நீங்கள் அதை வாரத்தில் 5 நாட்கள் பொடி வடிவத்திலும், இரண்டு நாட்களுக்கு சாறு வடிவத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.
- முருங்கை இலை பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கலந்து தலைமுடியில் தடவி அரை மணிநேரம் கழித்து அலசலாம். இது உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்கி, அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.