CBSE Board Exams 2026: அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குவது எப்படி? பேராசிரியரின் விளக்கம்!!
CBSE Board Exams: முக்கியமாக, மாதிரி வினாத்தாள்களுக்கு விடையளித்து பயிற்சி செய்வது மிகவும் உதவும். வாரத்திற்கு ஒரு கேள்வித்தாளுக்கு விடையளித்தால் கூட துல்லியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். 10ஆம் வகுப்பு கடினமில்லை - சரியான நேரத்தில் சரியான முறையில் தொடங்கினால் போதும். அந்த நேரம் இப்போதுதான்.
2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026 பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் படி, 2026 முதல் ஒரு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என CBSE அறிவித்துள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது, பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரையும், 12ஆம் வகுப்பு தேர்வானது பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரையும் நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பில் மாணவர்கள் கடினமாக உணரும் பாடமான அறிவியல் (Science) தேர்வு பிப்ரவரி 25, புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை:
அறிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பது ஏன் முக்கியம் தெரியுமா? அறிவியல் பாடம், 10ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண்களைப் பெரிதும் பாதிக்கும். கேள்விகள் சற்று சிக்கலாக வர வாய்ப்புள்ளதால், மாணவர்கள் தவிர்க்காமல் அனைத்து பாடங்களையும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்துக்களை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கோட்பாட்டு அறிவை பயன்படுத்தி எண் கேள்விகள் மற்றும் MCQ களை முடிக்க வேண்டும்.
மேலும் படிக்க: Children’s Day 2025: குழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகள் உரையாற்ற ஆசையா? இப்படி பேசினால் ஆசிரியர்களும் ரசிகர்களாக மாறுவார்கள்!
இதையொட்டி, ஆன்லைன் கல்வி தளமான PhysicsWallah-வின் இயற்பியல் நிபுணர் ரக்க்ஷக் வழங்கிய முக்கிய அறிவுரைகள், “10ஆம் வகுப்பு போர்டு தேர்வுகள் பயமுறுத்துவதாகத் தோன்றலாம், ஆனால் சரியான அணுகுமுறையால் அவற்றை எளிதாக கடக்க முடியும். கடந்த சில ஆண்டுகளில், CBSE கருத்து அடிப்படையிலான, பயன்பாட்டு மற்றும் திறன் சார்ந்த கேள்விகளுக்கு மாறிவிட்டது. ஆதலால் மனப்பாடம் செய்வதைவிட, புரிந்து படிப்பது முக்கியம் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, அடிப்படை கருத்துகளில் தெளிவு வேண்டும். குறிப்புகளை மீண்டும் படிக்க வேண்டும். இயற்பியலில் கணக்கு கேள்விகளை பலமுறை பயிற்சி செய்ய வேண்டும். வேதியியலில் உள்ள வினைகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். உயிரியல் பாடத்தில் வரைபடங்கள் மற்றும் முக்கிய சொற்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை:
கடந்த ஆண்டின் வினாத்தாள்களின் கடினமான பாடத்திட்டம் காரணமாக, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயப்படுவது இயல்பு. இந்த பயத்தை வெல்ல ரக்ஷக் சர் கூறிய பரிந்துரைகள்:
மேலும் படிக்க: இலங்கைதான் டூர் பிளான்.. சுற்றுலாவுக்கு குவியும் இந்தியர்கள்…. அப்படி என்னதான் ஸ்பெஷல்?
முதலில் முழு பாடத்திட்டத்தையும் முடிக்க வேண்டும். மனப்பாடம் செய்து படிக்காமல், கருத்தைப் புரிந்து படிக்க வேண்டும். CBSE இப்போது கருத்து சார்ந்த கேள்விகளை அதிகம் கேட்கிறது . எனவே ஆழமான புரிதல் அவசியம். அதிக மதிப்பெண் பெறக்கூடிய முக்கிய அத்தியாயங்கள்: Semiconductors, Optics, Modern Physics ஆகும்.
மறுபயிற்சியை திட்டமிட்டு செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் கொண்ட பகுதிகளை முதலில் கவனித்து படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.