Republic Day 2026: குடியரசு தினம் என்றால் என்ன..? இந்த நாள் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏன் முக்கியம்?
Republic Day Meaning: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா ஒரு சுதந்திரக் குடியரசாக நிறுவப்பட்டது. ஆனால் அது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியே நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, ஜனவரி 26 ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது .

குடியரசு தினம் 2026
குடியரசு தினம் (Republic Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடு குடியரசாக மாறியதாக அறிவிக்கப்பட்டது. எளிமையான வார்த்தைகளில் சொன்னால், அரசியலமைப்பு (Constitution) 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தபோது, இந்திய நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்தை பெற்று தந்தது. இருப்பினும், இன்னும் சிலருக்கு குடியரசு தினம் ஏன் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது, குடியரசு என்பதன் அர்த்தம் என்ன, இந்த நாளின் வரலாறு என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் உள்ளனர். எனவே, இந்தக் கட்டுரை ஜனவரி 26 அன்று ‘குடியரசு தினம்’ கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குடியரசு ’26-26′ என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்.. பாதுகாப்பு வளையத்தில் டெல்லி..
குடியரசு என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அமல்படுத்தப்பட்டபோது, இந்திய நாடு ஒரு குடியரசு நாடாக மாறியது. குடியரசு என்றால் இந்தியாவிற்கு என்ற தனிச்சட்டத்துடன், அரசானது மக்களுக்குச் சொந்தமானது என்று பொருள். இதன்பொருள் முடியாட்சி முடிந்ததும், ஒரு குடியரசு தொடங்குகிறது என்று கூறப்படுகிறது. முடியாட்சி என்று அழைக்கப்படும் மன்னராட்சியில், அரசாங்கம் தந்தைக்கு பின் மகனுக்கு என அந்நாட்டின் மன்னருக்கு சொந்தமானதாக பார்க்கப்பட்டது. குடியரசு நாட்டில் அரசானது முழுக்க முழுக்க மக்களுக்கு சொந்தமானது. எளிமையாகச் சொன்னால், குடியரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சியாகும். குடியரசு அங்கீகாரம் பெற்ற நாட்டில் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்கிறது. ஒரு குடியரசு முதன்மையாக அரசியலமைப்பை மையமாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
குடிமகன் என்றால் என்ன..?
#RepublicDay 2026 🇮🇳
06 Days to Go…Watch behind the scenes of the Republic Day Parade Camp & Kartavya Path to witness the life of an #IndianArmy soldier, where every action, every march and every command is a tribute to the nation’s pride and unity.
Discover the untold story… pic.twitter.com/dqJG622U1e
— ADG PI – INDIAN ARMY (@adgpi) January 20, 2026
நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், 21 துப்பாக்கிச் சூடுகளுடன் கொடியை ஏற்றி, இந்தியாவை ஒரு முழுமையான குடியரசாக அறிவித்தார். நமது அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு ஜனநாயக ரீதியாக தங்கள் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குகிறது. ஒவ்வொரு குடிமகனும் ஒரு தனித்துவமான மற்றும் புதிய அடையாளத்தைப் பெற்ற நாளை இது ஒவ்வொரு குடிமகனுக்கும் நினைவூட்டுகிறது.
ALSO READ: குடியரசு தின விழாவில் CRPF ஆண்கள் பிரிவை வழிநடத்தப்போகும் பெண் கமாண்டன்ட்.. யார் இந்த சிம்ரன் பாலா?
ஜனவரி 26 குடியரசு தினத்தின் முக்கியத்துவம் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா ஒரு சுதந்திரக் குடியரசாக நிறுவப்பட்டது. ஆனால் அது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியே நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, ஜனவரி 26 ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது . இந்தியாவின் குடியரசு மற்றும் ஜனநாயக உரிமைகளை பெற்று தருவதற்காக அதன் முக்கியத்துவத்திற்காக இந்த நாள் அறியப்படுகிறது.