AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துரோகம் உன்னைத் தனிமைப்படுத்துகிறதா? அல்லது உன்னைச் செதுக்குகிறதா?

Life Change: வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும் என்றால் முதலில் மனதில் உறுதியான தீர்மானம் இருக்க வேண்டும். பயம் மற்றும் தயக்கம் மனிதனை முன்னேற விடாமல் தடுக்கின்றன. போலியான அன்பும் பொய்யான உறவுகளும் வாழ்க்கையில் ஏமாற்றத்தை தரும் என்பதால் தெளிவாக மனிதர்களை புரிந்துகொள்ள வேண்டும்.

துரோகம் உன்னைத் தனிமைப்படுத்துகிறதா? அல்லது உன்னைச் செதுக்குகிறதா?
சாணக்ய நீதி
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 May 2026 11:00 AM IST

வாழ்வின் மாற்றத்திற்கும் தற்போதய நிலைக்கும் உள்ள தொலைவுக்குப் பெயரே தீர்மானம். மனித வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் மனதில் உறுதியான முடிவு இருக்க வேண்டும் என்பதையே இந்த வரிகள் உணர்த்துகின்றன. பலர் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கான முதல் அடியை எடுக்க தயங்குகிறார்கள். ஆனால் மாற்றம் என்பது வெளியில் இருந்து வருவது அல்ல, அது நம்முள் இருந்து துவங்கும் ஒரு பயணம். நமக்கான மாற்றம் நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்க்கையை புதிய திசைக்கு கொண்டு செல்லும் சக்தியாக அமைகிறது.

தீர்மானத்தின் வலிமை

மாற வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் மாற்றம் வரும், தயங்கித் தயங்கி அல்லது பயந்து பயந்து நிற்கும் தருணங்கள் பயனற்ற தருணங்களே என்று கூறப்படும் கருத்து வாழ்க்கையின் உண்மையை எடுத்துரைக்கிறது. வெற்றியை அடைந்த ஒவ்வொருவரின் பின்னாலும் தைரியமான முடிவுகள் இருக்கின்றன. பயம், குழப்பம், தாமதம் ஆகியவை மனிதனை ஒரே இடத்தில் நிறுத்திவிடும். ஆனால் ஒரு உறுதியான தீர்மானம் மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும். தீர்மானித்து ஒரு முடிவெடு வாழ்க்கையையே மாற்றிப் போடு என்ற வரிகள், தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கைக்கு ஊக்கமாக அமைகின்றன.

உணர்வுகளின் உண்மை முகம்

பொய்யான கோபம் அழகானது, பொய்யான அன்பு ஆபத்தானது என்ற வரிகள் மனித உறவுகளின் மறைமுக உண்மையை வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் வெளிப்படையாக கோபம் காட்டுபவர்கள் உண்மையில் அக்கறை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் போலியான அன்பு காட்டுபவர்கள் மனதை காயப்படுத்தக்கூடியவர்களாக மாறலாம். இங்கே பொய்கள் அழகாக தெரியும், போலிகள் நிரந்தரமானதாக தெரியும் என்ற சிந்தனை, இன்றைய சமூகத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களை பிரதிபலிக்கிறது.

தெளிவின் அவசியம்

நாம் தெளிவடையாத வரைக்கும் எதையும் மாற்றவோ திருத்தவோ முடியாது என்பதில் ஆழமான வாழ்க்கை அனுபவம் மறைந்துள்ளது. எந்த சூழலிலும் உண்மையை புரிந்துகொள்ளும் தெளிவு மிகவும் முக்கியமானது. எதுவுமே உண்மை இல்லை, ஒரே உண்மைக்கு பலரும் பலவிதமாக விளக்கம் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவே என்ற கருத்து மனிதர்களின் பார்வை வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப உண்மையை புரிந்துகொள்கிறார்கள்.

உன்னுள் உன்னை கண்டறியும் பயணம்

ஒவ்வொரு கனிக்கும் தனித்தனி சுவையுண்டு, உனக்கும் வாழ ஒரு வழியும்முண்டு என்ற வரிகள் வாழ்க்கைக்கு நம்பிக்கையை தருகின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்திறன், தனிப்பாதை, தனி அடையாளம் உள்ளது என்பதை இது நினைவூட்டுகிறது. மற்றவர்களைப் போல ஆக முயற்சிப்பதற்குப் பதிலாக, உனக்குள் உன்னை நீ கண்டுபிடி என்ற சிந்தனை வாழ்க்கையின் உண்மையான வெற்றியை உணர்த்துகிறது. தன்னம்பிக்கை மற்றும் சுயஅறிவு சேர்ந்தால் மனிதன் எதையும் சாதிக்க முடியும்.

Follow Us