Walking Tips: காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறீர்களா..? நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்..!
Morning Walk: காலை நடைப்பயிற்சியின் போது செய்யும் சில சிறிய தவறுகள் கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தினமும் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றால் அல்லது தொடங்க நினைத்தால், காலை நடைப்பயிற்சியின் போது நீங்கள் செய்யக்கூடாத 5 பெரிய தவறுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

காலை நடைப்பயிற்சி
கோடை காலம், மழைக்காலம், குளிர்காலம் (Winter) என எந்த காலமாக இருந்தாலும் காலையில் நடைப்பயிற்சி செய்வது புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நன்மை பயக்கும். குளிர்ந்த காற்று, அமைதி மற்றும் இயற்கைக்கு நடுவே பசுமையில் நடப்பது உங்கள் மனநிலையை மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்தையும் கணிசமாக மேம்படுத்தும். காலை நடைப்பயிற்சியின் (Walking) போது செய்யும் சில சிறிய தவறுகள் கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தினமும் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றால் அல்லது தொடங்க நினைத்தால், காலை நடைப்பயிற்சியின் போது நீங்கள் செய்யக்கூடாத 5 பெரிய தவறுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 6-6-6 நடைப்பயிற்சி என்றால் என்ன? இது ஏன் உடலுக்கு முக்கியம்? மருத்துவர் அருண் குமார் விளக்கம்!
போதுமான அளவு தண்ணீர்:
பலர் தண்ணீர் குடிக்காமல் காலை நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இது சோர்வு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலையில் உடல் ஏற்கனவே சற்று நீரிழப்புடன் இருப்பதால், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் தசைப்பிடிப்பு, தலைச்சுற்றல் மற்றும் ஆற்றல் குறைவு ஏற்படும். எனவே நடைப்பயிற்சிக்குச் செல்வதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். எக்காரணத்தையும் கொண்டு மறக்காதீர்கள்.
வார்ம்-அப்:
வார்ம்-அப் இல்லாமல் நடக்கத் தொடங்கினால், அது உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குளிர்காலத்தில் செய்து பயிற்சியை செய்வது முக்கியம். இது தசை நீட்சி அல்லது காயத்தை ஏற்படுத்தும். எனவே நடப்பதற்கு முன் 2-5 நிமிடங்கள் லேசான நீட்சி மற்றும் மூட்டு அசைவுகளை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதன்படி, உங்கள் கைகள், கால்கள் மற்றும் கழுத்தைத் திருப்புவது உங்கள் நடைப்பயணத்தை ஆபத்தில்லாமல் செய்யும்.
காலையில் வெறும் வயிற்றில் காபியா..?
சிலர் தங்கள் சக்தியை அதிகரிக்க நடைப்பயிற்சிக்குச் செல்வதற்கு முன் காபி குடிக்கிறார்கள். இதுவும் தவறு. வெறும் வயிற்றில் காஃபின் அமிலத்தன்மை, பதட்டம், நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். மிகவும் அவசியமானால், உணவுக்குப் பிறகு காபி குடிக்கவும் அல்லது நடைபயிற்சிக்கு முன் லேசான காலை உணவை உட்கொள்ளவும்.
ALSO READ: குளிர்காலத்தில் அடிக்கடி தொண்டை வலியா..? இந்த பொருட்கள் எளிதாக சரிசெய்யும்!
கழிப்பறை பயன்பாடு:
நடைப்பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு கழிப்பறைக்குச் செல்லமால், அதைத் தள்ளிப் போடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் UTI (சிறுநீர் பாதை தொற்று)க்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் ஆரோக்கியமான நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு கழிப்பறைக்கு சென்று காலை கடன்களை முடிப்பது நல்லது.