Food Recipe: தந்தூரி டீ குடிக்க கடைக்கு போக வேண்டாம்.. இப்படி செய்து வீட்டிலேயே ருசிங்க!

Tandoori Tea: இஞ்சி மற்றும் மசாலா பொருட்களால் தயாரிக்கப்படும் தந்தூரி டீ, களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டத்தில் டீ (Tea) பரிமாறப்படுகிறது. அதிகப்படியான சூட்டில் நுரையுடன் இணைந்து, மண் வாசனையுடன் சுவையை தரும். இந்த தந்தூரி டீயை கடைகளில் சென்றுதான் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை, வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.

Food Recipe: தந்தூரி டீ குடிக்க கடைக்கு போக வேண்டாம்.. இப்படி செய்து வீட்டிலேயே ருசிங்க!

தந்தூரி டீ

Published: 

19 Nov 2025 17:21 PM

 IST

இந்தியாவில் டீ பிரியர்களுக்கு பஞ்சமே இல்லை. மழை (Rainy Season) மற்றும் குளிர்காலத்தில் சூடான டீ யாருக்குதான் பிடிக்காது. அந்தவகையில், நீங்களும் டீ பிரியராக இருந்தால், இந்த தந்தூரி டீயை ருசித்து பாருங்கள். இது தந்தூரி மண்பானை டீ என்று அழைக்கப்படுகிறது. இஞ்சி மற்றும் மசாலா பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த டீ, களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டத்தில் டீ (Tea) பரிமாறப்படுகிறது. அதிகப்படியான சூட்டில் நுரையுடன் இணைந்து, மண் வாசனையுடன் சுவையை தரும். இந்த தந்தூரி டீயை கடைகளில் சென்றுதான் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை, வீட்டிலேயே செய்து குடிக்கலாம். அதன்படி, வீட்டிலேயே தந்தூரி டீ எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தந்தூரி டீ செய்ய தேவையான பொருட்கள்:

  • பால் – 1 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • டீ தூள் – 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 3
  • இஞ்சி – சிறிய துண்டு
  • சிறிய மண்பானை – 1
  • டீ வடிக்கட்டி
  • சர்க்கரை – தேவையான அளவு

ALSO READ: மழைக்காலத்தில் மகத்தான ரெசிபி.. ஆரோக்கியமான காளான் சூப் செய்வது எப்படி?

வீட்டிலேயே தந்தூரி டீ தயாரிப்பது எப்படி..?

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் டீ தூள், இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். உங்களுக்கு விருப்பம் எனில், கிராம்பும் சேர்த்து கொள்ளலாம். இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. டீ தூள் நிறம் இறங்கி தண்ணீர் நிறம் மாறத் தொடங்கும்போது, பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். இவை ஒன்று சேர்ந்து கொதி நிலைக்கு வரும் வரை காத்திருங்கள்.
  3. இப்போது, மற்றொரு அடுப்பில் தீயை பற்றவைத்து ஒரு களிமண் பானை அல்லது ஒரு சிறிய மண் பானையை நேரடியாக காட்டி சூடு செய்யவும். பானை சிறிது கருப்பாக மாற தொடங்கியது, அந்த சூடான பானையை ஒரு சில்வர் கிண்ணத்தில் வைக்கவும்.
  4. பின்னர், மெதுவாக அதில் டீயை கவனத்துடன் ஊற்றவும். இந்த டீயை பானையில் ஊற்றும்போது, அதிலிருந்து புகை வரும். அவ்வளவுதான் சுவையான தந்தூரி டீ ரெடி. உங்களுக்கு சுவையை அதிகரிக்க வேண்டுமென்றால், உங்களுக்கு விருப்பமெனில், சிறிது பொடித்த இலவங்கப்பட்டை அல்லது ஏலக்காயை தூவலாம்.

ALSO READ: விசேஷ நாட்களில் ஸ்வீட் விருந்து.. சூப்பரான பீட்ரூட் ஹல்வா செய்முறை!

தந்தூரி டீ தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

  • களிமண் குடிப்பதால் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி, வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கும் தாதுக்களை கொண்டுள்ளன.
  • டீ தயாரிக்கும்போது வர்ணம் பூசப்பட்ட அல்லது பளபளப்பான மண் பானைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், இவை தீங்கு விளைவிக்கும்.
  • மண் பானை சூடும் செய்யும்போது கிட்டத்தட்ட கருப்பு நிறமாக மாறும் வரை அடுப்பில் சூடாக்கவும்.
  • டீ தயாரிக்கும்போது புதினா, சாக்லேட் அல்லது வெல்ல டீயை முயற்சி செய்யலாம்.
8 மணி நேர வேலை கோரிய தீபிகா படுகோன்
காதலரை கரம் பிடிக்கப்போகும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா?
பென்சிலால் துளையிடும் அளவுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளின் தரம்
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?