Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Homemade Baby Cerelac: 6 மாத குழந்தைகளுக்கு சத்தான உணவு வேண்டுமா..? 10 நிமிடங்களில் பேபி செரிலாக் இப்படி செய்யுங்க!

Homemade Baby Cerelac Recipe: 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சத்தான மற்றும் பாதுகாப்பான செரிலாக்கை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு வகைகள், கோதுமை போன்ற தானியங்களை வறுத்து பொடி செய்து, தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

Homemade Baby Cerelac: 6 மாத குழந்தைகளுக்கு சத்தான உணவு வேண்டுமா..? 10 நிமிடங்களில் பேபி செரிலாக் இப்படி செய்யுங்க!
பேபி செரிலாக்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Aug 2025 18:06 PM

பிறந்த குழந்தை 6 மாதத்தை கடக்கும்போது, குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு திட உணவுகளை கொடுக்க தொடங்குகின்றனர். இந்த நேரம் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்துடன் இருப்பது முக்கியமானது. ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு சத்தான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு (Baby Food) கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது பேபி செரிலாக்தான் (Baby Cerelac). கடைகளில் கிடைக்கும் செரிலாக்கில் பெரும்பாலும் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படும். இது பின்நாளில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். இந்தநிலையில், சத்தான மற்றும் பாதுகாப்பான பேபி செரிலாக்கை வெறும் 10 நிமிடங்களில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

செரிலாக் செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசி – 2 ஸ்பூன்
  • பாசி பருப்பு – 1 ஸ்பூன்
  • மைசூர் பருப்பு – 1 ஸ்பூன்
  • கோதுமை அல்லது ரவை -1 ஸ்பூன்
  • வேர்க்கடலை – 1 ஸ்பூன்
  • தினை அல்லது ராகி – 1 ஸ்பூன்

ALSO READ: தாய்ப்பால் நிறுத்தியதும் பெண்களுக்கு எடை ஏன் கூடுகிறது..? காரணங்கள்- தீர்வுகள் இதோ!

ஆரோக்கியமான செரிலாக் செய்வது எப்படி..?

  1. அனைத்து தானியங்களையும், பருப்பு வகைகளையும் நன்கு சுத்தம் செய்து, சிறிது நேரம் வெயிலில் உலர்த்தவும்
  2. பின்னர், அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றாமல் லேசான வாசனை வரும் வரை ஒவ்வொன்றாக வறுக்கவும். கருகாமல் பார்த்து கொள்ளவும்.
  3. இப்போது, இவை அனைத்தையும் ஆறிய பிறகு, மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  4. காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும். இந்த பொடி 20 நாட்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும்.

குழந்தைக்கு எப்படி உணவு அளிப்பது..?

  • ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து அரை கப் தண்ணீரில் கலக்கவும். இப்போது, குறைந்த தீயில் 4 நிமிடங்கள் கிண்டவும்.
  • உங்கள் விருப்பம் இருந்தால், சிறிது நெய் அல்லது பால் சேர்க்கலாம்.
  • சூடு ஆரியதும், நன்றாக கலந்து ஒவ்வொரு ஸ்பூனாக குழந்தைக்கு ஊட்டி விடலாம்.

இந்த செரிலாக் ஆனது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. மேலும், நன்மை பயக்கும். குழந்தைகளை வெளிப்புற விஷயங்களிலிருந்து எவ்வளவு அதிகமாக விலக்கி வைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே இந்த செரிலாக்கை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள்.

ALSO READ: சர்க்கரையும், உப்பும்.. 2 வயது குழந்தைகளுக்கு ஏன் கொடுக்கக்கூடாது..?

பெரியவர்களின் கைகளால் தயாரிக்கப்படும் செரிலாக், கடைகளில் கிடைக்கும் பொருட்களை விட மிகவும் சிறந்தது. இது அன்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இது எளிதாக செய்வது மட்டுமின்றி, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது மற்றும் நன்மை பயக்கும். எனவே அடுத்த முறை நீங்கள் குழந்தை செரிலாக் வாங்க கடைக்குச் செல்லும்போது, அதை வீட்டிலேயே தயாரிக்க நினைத்துப் பாருங்கள். அதுவும் வெறும் 10 நிமிடங்களில் சிறப்பானதாக மாற்றும்.