Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tips for Repelling Rat: வீட்டில் எலிகள் உங்களைத் தொந்தரவு செய்கிறதா? விரட்ட உதவும் எளிய குறிப்புகள்..!

Home Remedies to Drive Rats Out: பல்வேறு வீடுகளின் மூலைகளிலோ, ஜன்னல்களுக்குப் பின்னலோ அல்லது சமையலறை (Kitchen) அலமாரிகளிலோ எலிகள் தொந்தரவு செய்யலாம். ஒரு எலி (Rat) வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவை விரைவாக வெளியேறாது. அவற்றின் அச்சுறுத்தலை போக்க பல விஷயங்களை மேற்கொள்வோம். இது பெரியளவில் பயனை தராது.

Tips for Repelling Rat: வீட்டில் எலிகள் உங்களைத் தொந்தரவு செய்கிறதா? விரட்ட உதவும் எளிய குறிப்புகள்..!
எலி தொல்லைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jan 2026 19:05 PM IST

உங்கள் வீட்டில் எலி பிரச்சனை இருக்கிறதா? நெட் அல்லது எலி விரட்டிகளை வைத்தாலும் எந்தப் பயனும் இல்லையா? இதுபோன்ற சூழ்நிலைகளில், சில வீட்டு வைத்தியம் மூலம் அவற்றை எளிதாக விரட்டலாம். பல்வேறு வீடுகளின் மூலைகளிலோ, ஜன்னல்களுக்குப் பின்னலோ அல்லது சமையலறை (Kitchen) அலமாரிகளிலோ எலிகள் தொந்தரவு செய்யலாம். ஒரு எலி (Rat) வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவை விரைவாக வெளியேறாது. அவற்றின் அச்சுறுத்தலை போக்க பல விஷயங்களை மேற்கொள்வோம். இது பெரியளவில் பயனை தராது. இதனால் வீடுகளுக்கு எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து நாற்றம் மற்றும் கழிவுகளை விடுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் எலிகளைக் கொல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்ற சில வீட்டு குறிப்புகள் இங்கே..

ALSO READ: தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறீர்களா? அப்போ ஜாக்கிரதை!!

வெங்காயம்:

முதலில் வெங்காயத்தை மசித்து, அதன் சாற்றை எடுத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். எலிகளைக் கண்ட இடத்திலோ அல்லது உங்கள் வீட்டின் மூலைகளிலோ தெளிக்கவும். எலிகளுக்கு வெங்காயத்தின் வாசனை பிடிக்காது. இந்த வாசனையால் அவை சலிப்படைந்து மெதுவாக ஓடிவிடும்.

கற்பூர வாசனை:

கற்பூர வாசனை எலிகளுக்கு மிகவும் கடுமையானது. வீட்டின் மூலைகளிலோ, கடை அறையிலோ, சமையலறை பலகையின் கீழோ அல்லது எலிகள் சுற்றித் திரியும் இடங்களிலோ கற்பூர வாசனைகளை கொளுத்தி வைக்கலாம். இதன் வாசனை பரவியவுடன், எலிகள் அங்கேயே இருக்க முடியாது. அவை வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்.

புதினா:

எலிகளுக்கு புதினாவின் வாசனை பிடிக்கவே பிடிக்காது. வீட்டின் மூலைகளிலும், எலிகள் தெரியும் இடங்களிலும் ப்ரஸான புதினா இலைகளை வைக்கலாம். நீங்கள் விரும்பினால், ஒரு பஞ்சில் புதினா சாறு அல்லது புதினா எண்ணெயையும் ஊற்றலாம். இது எலிகள் வராமல் தடுக்கும்.

படிகாரம்:

படிகாரப் பொடியை அரைத்து தண்ணீரில் கலக்கவும். இப்போது இந்தக் கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டின் மூலைகளிலும், எலிகள் வரும் பாதைகளிலும் தெளிக்கவும். படிகாரத்தின் வாசனையும் விளைவும் எலிகளை அந்த இடத்தை விட்டு வெளியேறச் செய்யும்.

ALSO READ: குளியலறையில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத பொருட்கள்.. இவை நோயை உண்டாக்கலாம்..!

மேலும் சில குறிப்புகள்..

எலிகளை விரட்ட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை மேற்கொண்டாலும், வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். வீடுகளில் சமைத்த பிறகு அல்லது சாப்பிட்ட பிறகு உணவுப் பொருட்களைத் திறந்து வைக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் அன்றாட குப்பைகளை வெளியே போடவும். இதுமட்டுமின்றி, சுவர்களில் உள்ள விரிசல்களை மூடவும். வீடு சுத்தமாகவும் மணமற்றதாகவும் இருக்கும்போது, ​​எலிகள் இருக்காது. அவற்றைக் கொல்லாமல் வீட்டு முறைகள் மூலம் அவற்றை விரட்டலாம்.