Helmet Hair Loss: ஹெல்மெட் அணிவதற்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள்.. இது உங்கள் முடியை பாதுகாக்கும்!
Prevent Helmet Hair Damage: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஆனால், ஹெல்மெட் தொடர்ந்து அணிவதால் முடி உதிர்தல் ஏற்படலாம். இந்தக் கட்டுரை, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகளை விளக்குகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் (Helmet) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலுவகத்திற்கு செல்வராக இருந்தாலும் சரி, வெகு தூரம் பயணிக்கும் நபராக இருந்தாலும் சரி, தினமும் ஹெல்மெட் அணிவது உங்கள் உயிரை பாதுகாக்க செய்யும். ஹெல்மெட் தலையை பாதுகாக்கும் என்றாலும் தலைமுடிக்கு பாதிப்பை கொடுக்கிறது. ஆம், தொடர்ந்து ஹெல்மெட் அணிவது முடி உதிர்தலை (Hair Loss) ஏற்படுத்துகிறது. இதனால், குளிக்கும்போதும், ஹெல்மேட் அணியும்போது தலை முடி அதிகமாக உதிர தொடங்கும். எனவே உங்கள் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஹெல்மெட் தலைமுடியை எவ்வாறு சேதப்படுத்துகிறது?
ஹேர் ஸ்டைலிஸ்ட்களின் கூற்றுப்படி, வெயில் காலம் மட்டுமின்றி, ஹெல்மெட் அணிவதால் உச்சந்தலையில் அதிக வியர்வை ஏற்படுகிறது. இதன் காரணமாக முடியின் வேர்கள் பலவீனமடைய தொடங்குகின்றன. இதனால், ஹெல்மெட்டை கழற்றி அணியும்போதும், முடி இழுக்கப்படும்போது, அதுவும் முடி உதிர்தலுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைக்கிறது. உங்கள் ஹெல்மெட் மிகவும் இறுக்கமாக இருந்தால் அல்லது சரியாக பொருந்தவில்லை என்றால் அதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற ஹெல்மேட்களை தொடர்ந்து அணியும்போது முடி உடைந்து, காலப்போக்கில் அது உதிரத் தொடங்குகிறது.
ALSO READ: பளபளப்பான கூந்தல் வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஹேர் மாஸ்க்!
ஹெல்மெட்டிலிருந்து உங்கள் தலைமுடியை பாதுகாப்பது எப்படி..?
- ஹெல்மெட்டிலிருந்து முடியைப் பாதுகாக்க, முடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். முடியில் வியர்வை மற்றும் அழுக்கு சேராமல் இருக்க அவ்வபோது முடியை அலச வேண்டும்.
- உங்கள் தலைமுடியில் எண்ணெய் தடவ ஒருபோதும் மறக்காதீர்கள். ஷாம்பு போடுவதற்கு முன் எண்ணெய் தடவுவது வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை முடியை வளர்க்கிறது. இது ஹெல்மெட் அணியும்போதும் முடியை பாதுகாக்க உதவுகிறது.
- எக்காரணத்தை கொண்டும் ஈரமான கூந்தலில் ஹெல்மெட் அணியக்கூடாது. ஈரமான கூந்தலில் ஹெல்மெட் அணிவது முடி உடைவதற்கும் உச்சந்தலையில் பொடுகு ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
- எப்போதும் ஹெல்மெட் அணிவதற்கு முன், உங்கள் தலைக்கு மேல் துணி போன்றவற்றை அணிய வேண்டும். இவற்றை அணிவது வியர்வையை உறிஞ்சி, முடி உதிர்வதை தடுத்து முடி உதிர்தலைக் குறைக்கிறது.
- சரியான அளவிலான ஹெல்மெட் அணிவதும் முக்கியம். உங்கள் தலையில் வசதியாகப் பொருந்தும் மற்றும் மிகவும் இறுக்கமாக இல்லாத ஹெல்மெட்டை எப்போதும் அணிய வேண்டும்.
- உங்கள் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் ஹெல்மெட்டிற்குள் சேரும் வியர்வை, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் முடியை சேதப்படுத்தும்.
- ஹெல்மெட்டை தலையிலிருந்து எப்போதும் மெதுவாக அகற்ற வேண்டும். திடீரென்று ஹெல்மெட்டை உங்கள் தலையிலிருந்து அகற்றினால், உங்கள் முடி வேர்களில் இருந்து பிடுங்கப்படலாம். இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும்.
- எக்காரணத்தை கொண்டும் மற்றவர்களின் தலைக்கவசங்களை அணியக்கூடாது. ஏனெனில். மற்றவர்களின் உச்சந்தலையில் உள்ள தொற்று, பொடுகு அல்லது முடி உதிர்தல் அபாயத்தை அதிகரிக்கும்.
- வாரத்திற்கு ஒரு முறை உங்கள் தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல் உச்சந்தலையை குளிர்வித்து முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ALSO READ: முடி உடையும் பிரச்சனையா? இயற்கையான முறையில் தீர்வு இதோ!
பாதுகாப்பும் முக்கியம்:
உங்கள் பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிவது மிகவும் முக்கியம். ஆனால் முடி பராமரிப்பும் அதே அளவு முக்கியமானது. இந்த குறிப்புகளைப் பின்பற்றினால், ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்தலை பெருமளவில் தடுக்கலாம்.