முட்டை நல்லதா? கெட்டுப்போனதா? இந்த முறையில் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Egg Hack: முட்டையில் புரதம் மட்டுமல்லாமல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் தான் மருத்துவர்கள் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடும்படி அறிவுறுத்துகிறார்கள். இந்த நிலையில் சரியான முட்டையை தேர்வு செய்வது அவசியம். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முட்டையையாவது (Egg) சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முட்டைகள் மிக விரைவாக கெட்டுவிடும். இருப்பினும், எந்த முட்டை நல்லது, எது கெட்டுப்போனது என்பதை பார்த்தவுடன் சொல்வது மிகவும் கடினம். கெட்டுப்போன முட்டைகளை சாப்பிடுவது உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, முட்டைகள் நல்லதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எளிய முறையில் வீட்டில் இருந்த படியே முட்டையின் தரத்தை கண்டுபிடிக்கலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வீட்டில் இருந்த படியே முட்டையின் தரத்தை அறியும் சோதனை
தண்ணீர் சோதனை
ஒரு கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு முட்டையை போடவும். நல்ல முட்டை என்றால் அது தண்ணீரின் அடிப்பகுதிக்கு செல்லும். முட்டை கெட்டுப்போயிருந்தால் அது மேல் பகுதிக்கு வந்து மிதக்கும். இதனை வைத்து ஒரு முட்டை நல்லதா அல்லது கெட்டுபோயிருக்கிறதா என அறிய முடியும்.
இதையும் படிக்க : மழை காலங்களில் உடைகளில் சேறு படிகிறதா? தவிர்க்க இதை பண்ணுங்க!
வாசனை மூலம் சோதனை
முட்டை கெட்டுப்போயிருந்தால் அதன் வாசனையை வைத்து அடையாளம் காண முடியும். இதற்காக ஒரு கிணத்தில் முட்டையை வைத்து அதன் வாசனையை நுகருங்கள். முட்டை துர்நாற்றம் வீசினால் அது கெட்டுப்போனது என எளிதாக தெரியும்.
குலுக்கி பார்த்து சோதிக்கலாம்
முட்டையை உங்கள் காதுக்கு அருகில் வைத்து சோதிக்கவும். முட்டை ஏதேனும் அசாதாரண ஒலிகளை எழுப்பினால் அது கெட்டுப்போனதாக கருதப்படும். உட்புறம் அது கனமாக இருந்தால் அது அசாதாரண ஒலிகளை எழுப்பும். இதனை வைத்து முட்டையின் தரத்தை நாம் அறியலாம்.
இதையும் படிக்க : தங்க நகைகள் அணிவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? – ஆச்சரிய தகவல்
டார்ச்லைட் சோதனை
முட்டையை அதன் தரத்தை அறிய, நம் ஸ்மார்ட் போனில் டார்ச் லைட்டை ஆன் செய்து, முட்டையை வெளிச்சம் படும்படி மேல் நோக்கி பிடித்துக்கொள்ளுங்கள். முட்டை மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தால், அது புதியது என்பதற்கான அறிகுறியாகும். வெளிச்சம் குறைவாக இருந்தாலோ அல்லது வேறு வண்ணத்தில் இருந்தாலோ, முட்டை கெட்டுப்போனது என்று அர்த்தம். இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், புதிய முட்டைகளை எளிதாக அடையாளம் காணலாம்.
முட்டையில் புரதம் மட்டுமல்லாமல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் தான் மருத்துவர்கள் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். ஆனால் முட்டையை சரியானதாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கியம். மேற்சொன்ன முறைகளில் சரியான முட்டையைத் தேர்ந்தெடுக்க முடியும்.