தங்க நகைகள் அணிவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? – ஆச்சரிய தகவல்
Health Facts: பொதுவாக பெண்களுக்கு தங்க நகைகள் அணிவது அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் அதன் பின்னால் பல ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் குழந்தை பிறந்தால், அதற்கு காதுகுத்தி தங்க காதணி அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு தங்க நகைகளுடன் (Gold) பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு. அது அழுகுடன் தொடர்புபடுத்தி சொல்லப்படுவதால் பெண்கள் நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கூடுதலாக நகைகள் பெண்களுக்கு நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. காதணிகள் பெண்கள் அணிய விரும்பும் நகைகளில் ஒன்றாகும். ஆனால் நகைகள் அணிவது அழகுக்காக மட்டுமல்ல, அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. குழந்தைகளுக்கு காது குத்தி நகைகள் அணிவது வழக்கமாக வைத்திருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதன் பின்னால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும்.
இந்தியாவில், ஒரு குழந்தை பிறந்தால், சில மாதங்கள் கழித்து குழந்தைக்கு காது குத்தி தங்க காதணிகள் அணிவது வழக்கம். இந்தியர்களின் வாழ்க்கையில் தங்கம் வாங்குவது மிக முக்கியமான நடைமுறை. இன்றைய இளைஞர்கள் ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு நகைகளை அணிகிறார்கள். இருப்பினும், திருமணங்கள் மற்றும் விழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்க நகைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அதனால்தான் தங்கம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதன் தேவை குறையவில்லை.




இதையும் படிக்க : பிடிவாதமான கழிப்பறை மஞ்சள் கறைகளா..? சூப்பர் க்ளீன் தரும் ஐஸ் கட்டி தந்திரம்!
தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்ட பெண்கள் பல்வேறு டிசைன்களில் நகைகளை சேகரிக்கின்றனர். தங்கம் கௌரவத்தின் சின்னம். இருப்பினும், தங்க நகைகளில் காதணிகளுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. தங்க காதணிகளை அணிவதால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. தங்க காதணிகளை விரும்பாதவர்கள் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்திருந்தால் அதனை தவிர்க்க மாட்டார்கள்.
தங்க காதணிகளின் ஆரோக்கிய நன்மைகள்
- தங்க காதணிகளை அணிவது அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
- தங்க காதணிகளை அணிவது புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
- தங்க காதணிகள் அணிபவரின் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்குகிறது. இதனால் நேர்மறையாக இருக்க உதவுகிறது.
- தங்க காதணிகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
- இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தங்க காதணிகளை அணிவது கண்பார்வையை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்க : 30 நாட்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்ந்த நபர் – என்ன நடந்தது தெரியுமா?
பொதுவாக தங்க நகைகள் அணிவது அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் அதன் பின்னால் பல ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு காது குத்தி, தங்க நகைகள் அணிவதை வழக்கமாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.