Home Cleaning Tips: நெருங்கும் தீபாவளி.. வீட்டை சுத்தம் செய்ய இப்படி திட்டம் போடுங்க!
Diwali Home Cleaning Tips: பண்டிகை காலங்களில் குடும்பாக ஒன்றிணைந்து வீட்டை சுத்தம் செய்வோம். இருப்பினும், இப்போதெல்லாம், மக்கள் இதற்கு மிகக் குறைந்த நேரத்தையே இதற்காக செலவிடுகிறார்கள். அதன்படி, உங்களுக்கு சுத்தம் செய்ய நேரம் இல்லையென்றால் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதை எளிதாக்கும்.

தீபாவளி சுத்தம்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி (Diwali) என இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வரவுள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் பண்டிகை காலங்களை வரவேற்க சாமி கும்பிடுவதற்கு பொருட்கள் வாங்குதல், துணி எடுத்தல் என பரபரப்பாக இப்போதே தொடங்கிவிட்டனர். இந்த நேரத்தில், சுத்தமாக நமது வீடு மற்றும் சமையலறையை வைத்து கொள்வது முக்கியம் என்பதால், அனைவரும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய நாட்களை தேடுகிறார்கள். முன்பெல்லாம், பண்டிகை காலங்களில் குடும்பாக ஒன்றிணைந்து வீட்டை சுத்தம் (Home Cleaning) செய்வோம். இருப்பினும், இப்போதெல்லாம், மக்கள் இதற்கு மிகக் குறைந்த நேரத்தையே இதற்காக செலவிடுகிறார்கள். அதன்படி, உங்களுக்கு சுத்தம் செய்ய நேரம் இல்லையென்றால் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதை எளிதாக்கவும், கூடுதல் முயற்சியை மிச்சப்படுத்தவும் சில குறிப்புகள் இங்கே.
தீபாவளியின் போது சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கவில்லை என்றால், இந்த வழியில் அதை எளிதாக்கலாம். இது உங்கள் வீட்டை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கலாம்.
ALSO READ: கிட்சன் டைல்ஸின் அழகை கெடுக்கும் எண்ணெய் கறைகள்.. 2 நிமிடத்தில் பளபளக்க செய்யும் ட்ரிக்ஸ் இதோ!
என்ன செய்யலாம்..?
தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்யும் திட்டத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு அறை, சமையலறை, பால்கனி மற்றும் புல்வெளியின் பட்டியலை உருவாக்கி, எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள். இது வேலையை ஒழுங்காக செய்யவும், போதுமான நேரம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். விடுமுறை நாட்களில் உங்கள் பட்டியலின்படி ஒவ்வொரு பகுதியையும் சுத்தம் செய்யலாம். இது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் சோர்வை தராது.
தரையையும் கழிப்பறையையும் சுத்தம் செய்தல்:
நீங்கள் தினமும் தரை மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்தாலும், வீடு முழுவதும் சுத்தம் செய்தபின், ஒருமுறை நீங்கள் சோப்பு அல்லது பிற தரை துடைப்பான்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், படிக்கட்டுகளைச் சுத்தம் செய்வதிலும் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு செய்வது டைல்ஸ் அல்லது பளிங்குத் தரைகளில் உள்ள கறைகளை நீக்க உதவும். அதேநேரத்தில், ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் கண்ணாடிகளை சுத்தம் செய்யவும் மறவாதீர்கள்.
பயனற்ற பொருட்களை வெளியேற்றுங்கள்:
உங்கள் வீட்டின் மூலைகளில் கிடக்கும் பழைய மற்றும் பயனற்ற பொருட்களை வெளியேற்றுங்கள். அப்படி இல்லையென்றால், தேவைப்படுபவர்களுக்கு அவற்றைக் கொடுத்து உதவலாம். இது தேவையில்லாமல் இடத்தை அடைப்பதை தடுக்கும். இது பண்டிகை காலம் மட்டுமின்றி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்போதே இதைச் செய்யலாம்.
சுவர்களையும் சுத்தம் செய்யுங்கள்:
சுவர்களில் இருந்து தூசி மற்றும் அழுக்குகளை ஈரமான துணி அல்லது துடைப்பான் மூலம் சுத்தம் செய்யுங்கள். அதன்படி, சுவர்களில் இருந்து சிலந்தி வலைகள் அல்லது தூசியை அகற்றுங்கள்.
ALSO READ: குளியலறை குழாய்களில் உப்பு நீர் கறைகளா? சட்டென நீக்கும் எளியமுறை மந்திரம்..!
சமையலறை சுத்தம் செய்தல்:
ஒரு சமையலறையை ஒரே நாளில் முழுமையாக சுத்தம் செய்ய முடியாது. எனவே, அடுப்பு, சமையலறை டைல்ஸ், சிங்க் மற்றும் அலமாரிகளை நன்கு கழுவுங்கள். இந்த பணியை நீங்கள் இரண்டு நாட்களாகப் பிரித்து, ஒரு நாள் அடுப்பு, சிங்க் மற்றும் சன்னல் ஆகியவற்றை சுத்தம் செய்யலாம். அடுத்த நாள் அலமாரிகளை சுத்தம் செய்யுங்கள். மேலும், குளியலறை டைல்ஸ், குழாய்கள், கண்ணாடிகள் மற்றும் தரையை சுத்தம் செய்வதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.