Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் இதுதான்! உணவியல் நிபுணர் பகிர்ந்த தகவல்

Mammootty's Fitness Secret : நடிகர் மம்மூட்டி 73 வயதிலும் செம ஃபிட்டாக இருக்கிறார். மேலும் அடுத்தடுத்த படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது ஃபிட்னஸ் பலருக்கும் ஆச்சரியம் அளித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் மம்மூட்டியின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பிரபல உணவியல் நிபுணர் தகவல் பகிர்ந்துள்ளார்.

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் இதுதான்! உணவியல் நிபுணர் பகிர்ந்த தகவல்
மம்மூட்டி
karthikeyan-s
Karthikeyan S | Published: 19 May 2025 23:56 PM

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் (Mammootty)  தன் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.  அவருக்கு  73 வயது என்றால் யாராலும் நம்ப முடியாது. அவரைப் பற்றி தெரியாத வெளிநாட்டினர் யாராவது பார்த்தால் அவருக்கு அதிகபட்சம் 45 அல்லது 50 வயது இருக்கும் என சொல்வர். அந்த அளவுக்கு சரியான உணவுமுறை மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார். எனவே அவரின் உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை அறிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் ​​பிரபல உணவியல் நிபுணர் நடாஷா மோகன், மம்மூட்டியின் டயட் சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார்.  இதுகுறித்து நடாஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மம்முட்டியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை  பகிர்ந்து அவரது உணவுப்பழக்கம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில் நடிகர் மம்மூட்டி தனது ஒவ்வொரு உணவையும் ரசித்து உண்பதாகக் கூறுகிறார். மேலும் அவர் எல்லாவற்றையும் சாப்பிடுவாராம். ஆனால் அளவாக சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார் என நடாஷா தெரிவித்துள்ளார்.  மேலும் சர்க்கரை மற்றும்  ஜங்க் ஃபுட்டை முற்றிலுமாக தவிர்த்து அதன் மூலம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாகவும் பகிர்ந்துள்ளார்.

மம்மூட்டியின் உணவுமுறை குறித்து நடாஷா பகிர்ந்த தகவல்

  • ஒவ்வொரு காலை உணவிலும் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும்  கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும்.
  • மம்மூட்டி எப்போதும் உடலில் நீர் சத்து அதிகம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.  நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நீர் சத்து கொண்ட உணவை எடுத்துக்கொள்வார்.
  • ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த எல்லா வண்ணங்களும் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்.
  • இது சுவையான உணவை அனுபவித்து சாப்பிடுவது அவரது  எடையை பராமரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிரது. .
  • சிறந்த ஆற்றலைப் பெறவும் பராமரிக்கவும் பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுவார். சர்க்கரை மற்றும் ஜங்க் ஃபுட் உட்கொள்வதை தவிர்த்துவிடுவார்.
  • பசி ஏற்படும் நேரத்தில் தவிர்க்காமல் சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். இடையில் பசி எடுத்தால், சிறிய சிற்றுண்டிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • உங்கள் பசியின் அறிகுறிகளைக் கவனித்து, ஒவ்வொரு உணவையும் ரசித்து மகிழுங்கள். இது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
  • மம்மூட்டி வழக்கமான உடற்பயிற்சியைப் பின்பற்றுபவர். அவரைப் போலவே உணவுமுறையுடன் உடற்பயிற்சியையும் ஒரு வழக்கமான பழக்கமாக்குங்கள். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மம்மூட்டி தமிழில் மட்டும் 16 படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலசந்தரின் அழகன், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து தளபதி, அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், லிங்குசாமியின் ஆனந்தம், இயக்குநர் ராமின் பேரன்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக மலையாளத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் டோமினிக் தி லேடிஸ் பர்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?...
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH...
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?...
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?...
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?...
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?...
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...