முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!
Coriander for Skin : கொத்தமல்லி இலைகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. வைட்டமின் சி, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஈரப்பதம் தக்கவைக்கும் தன்மை கொண்டது. இந்தக் கட்டுரை கொத்தமல்லியைப் பயன்படுத்தி டோனர், ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்பதை விளக்கமாக தெரிவிக்கிறது

கொத்தமல்லி (Coriander) இலைகளை கடைசியாக தூவிவிட்டு நாம் செய்யும் உணவு பொருட்கள் பல உள்ளன. அதுமட்டுமின்றி,பல்வேறு பானங்கள்லும் டேஸ்ட் விஷயத்தை அதிகப்படுத்தவும், சில நேரங்களில் பார்க்க அழகாக இருக்கவும் கூட கொத்தமல்லி பயன்படுகிறது. இதனால் அதன் சுவையும் அதிகரிக்கிறது. ஆனால் கொத்தமல்லி சுவைக்கானது மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் சருமத்தை பளபளப்பாக்கவும் இதைப் பயன்படுத்தலாம். மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.
பச்சை கொத்தமல்லி இலைகள் குளிர்ச்சியூட்டும் விஷயங்களை கொண்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இது சருமத்தை கூலாக வைத்திருக்க உதவுகிறது. பச்சை கொத்தமல்லி இலைகளை தோல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுத்தலாம். இந்தக் கட்டுரையில் அதைப் பற்றி பார்க்கலாம்.
கொத்தமல்லி இலையின் நன்மைகள்
பச்சை கொத்தமல்லி இலைகள் சருமத்தை மென்மையாக்க உதவும். இதில் வைட்டமின் சி காணப்படுகிறது, இது கரும்புள்ளிகளைக் குறைப்பதில் நன்மை பயக்கும். மேலும், இதில் உள்ள பண்புகள் சருமத்தை சுருங்க விடாமல் இளமை தோற்றத்தில் வைத்திருக்க உதவும், மேலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைக் குறைக்க உதவும். மேலும் சருமம் நீர்ச்சத்துடன் இருக்க உதவும்.
டோனர் தயாரிப்பது எப்படி?
அதன் சுத்தமான இலைகளைப் பிரிக்கவும். இதற்குப் பிறகு அதை தண்ணீரில் கழுவவும். இப்போது ஒரு பாத்திரத்தை வைத்து, தண்ணீர் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து கொதிக்க விடவும். நீங்கள் இதை ஒரு டோனராகப் பயன்படுத்தலாம் அல்லது இந்த தண்ணீரில் உங்கள் முகத்தைக் கழுவலாம்.
கற்றாழை ஜெல் மற்றும் கொத்தமல்லி இலைகள்
கொத்தமல்லி இலைகளை அரைத்து மென்மையான பேஸ்ட் செய்யவும். இப்போது அதனுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த பேஸ்ட் கோடையில் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் குளிர்ச்சியுடனும் உணர உதவும். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும்.
பேஸ்மாஸ்க்
கொத்தமல்லி இலைகளை ஒரு பேஸ்ட் போல அரைக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கலாம். உங்கள் ஸ்கின்னுக்கு ஏற்றது என்றால் இதனை நீங்கள் தொடரலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)