பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து காதலனை கட்டி பிடித்தபடி சென்ற பெண்.. வைரல் வீடியோ!

Woman Sat On Petrol Tank in Two Wheeler | சாலை விதிகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டும் நபர்களின் வீடியோக்கள் சில அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துக்கொண்டு தனது காதலனை கட்டி அணைத்தபடி பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து காதலனை கட்டி பிடித்தபடி சென்ற பெண்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

28 Jul 2025 21:11 PM

புனே, ஜூலை 28 : புனேவில் பெண் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமரந்து தனது காதலனை கட்டி அணைத்தபடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் பயணம் செய்யும்போது சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அந்த ஜோடி சாலை விதிகளையும் கடைபிடிக்காமல் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துக்கொண்ட நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பலரும் காவல்துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து காதலனை கட்டி பிடித்தபடி பயணம் செய்த பெண்

இந்தியாவில் சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் குறிப்பிட்ட சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, அதிக வேகமாக செல்லாமல் இருப்பது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என பல விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்களுக்கு அதற்கான தண்டனையும் கடுமையாக இருக்கும். இந்த நிலையில், புனேவில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துக்கொண்டு தனது காதலனை கட்டி அணைத்தபடி பயணம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இப்படி ஒரு பக்தியா?.. பிறந்தநாள் கேக்கில் எரிந்த மெழுகு.. தலை குணிந்து கும்பிட்ட சிறுமி!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் இருசக்கர வாகனம் ஒன்று சென்றுக்கொண்டு இருக்கிறது. அந்த வாகனத்தை ஒருவர் ஓட்டிச் செல்லும் நிலையில், அந்த வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது இளம் பெண் ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அந்த பெண் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துக்கொண்டு தனது காதலனை கட்டி அணைத்துக்கொண்டு இருக்கிறார். இவற்றை அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் செல்லும் மற்றொரு வாகன ஓட்டி வீடியோ பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.