இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி!

Uttar Pradesh Crime News : உத்தர பிரதேசத்தில் மனைவியை கணவர் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடல் பாகங்களை எரித்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை வீசியுள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி!

மாதிரிப்படம்

Updated On: 

17 May 2025 14:05 PM

 IST

உத்தர பிரதேசம், மே 17 : உத்தர பிரதேச மாநிலத்தில் 31 வயதான நபர், தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியை துண்டு துண்டாக வெட்டி 10 கி.மீ தூரம் வரை உடல் பாகங்களை வீசி இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சைஃபுதீன். இவரது மனைவி 25 வயதான சபீனா. இவர்களுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மனைவி சபீனாவிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 2025 மே 14ஆம் தேதி பெண் சபீனாவின் சகோதரர் சலாவுதின் அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, இருவரும் வீட்டில் இல்லை.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், அவர்கள் லக்னோவுக்கு சென்றிருப்பதாக கூறினர். இதனால், தங்கையின் போனுக்கு தொடர்ந்து கால் செய்தும் வந்திருக்கிறார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்து மறுநாளும் அவரது வீட்டிற்கு சென்றபோது, அந்த பகுதியில் சைஃபுதீன் மட்டும் இருந்திருக்கிறார்.

இதனால், சந்தேகம் அடைந்த சலாவுதின் உடனே காவல்நிலையத்தில் தனது தங்கை சபீனா காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் சைஃபுதீனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர் எந்த பதிலும் கூறவில்லை. இரண்டு  நாட்களுக்கு பிறகு தனது மனைவி சபீனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து அவர் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்தார். அதாவது, லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சபீனாவை கொலை செய்ததாகவும், உடலை என்ன செய்வதன்று தெரியாமல் துண்டு துண்டாக வெட்டி எரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உடல் பாகங்களை 10 கிமீ தூரம் வரை வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.

உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்

மேலும், பெண்ணின் கையை எரித்த இடம் குறித்த தகவலை போலீசாரிடம் கூறினார். இதனை அடுத்து, போலீசார் அதனை மீட்டனர். மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர். போலீசார் சைஃபுதீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, சைஃபுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பெண் சபீனாவை துன்புறுத்தி வந்ததாக வந்தனர்.

இதன் காரணமாக எனது மகளை அவர்கள் கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் கூட, உத்தர பிரதேசத்தில் முன்னாள் ராணுவ வீரர் 6 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருமணம் மீறிய உறவுக்காக மனைவி, அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்